Home உலகம் எம்எச் 17 விவகாரத்தில் புடின் தப்பிக்க இயலாது – ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட்!

எம்எச் 17 விவகாரத்தில் புடின் தப்பிக்க இயலாது – ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட்!

608
0
SHARE
Ad

Tony-Abbot-Featureகேன்பெர்ரா, நவம்பர் 8 – எம்எச் 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தப்பிக்க இயலாது என ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட் (படம்) தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம், உக்ரைன் அருகே வானில் பறந்து கொண்டிருந்த மாஸ் விமானம் எம்எச் 17 ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. 298 பயணிகள் உயிரிழந்த இந்த பேரிடரில், 38 ஆஸ்திரேலியர்கள் பலியாயினர். இந்த விபத்து தொடர்பாகவும், பலியான ஆஸ்திரேலியர்கள் தொடர்பாகவும் ரஷ்ய அதிபர் புடினுடன், ஜி-20 நாடுகளின் மாநாட்டில் தான் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக, கடந்த மாதம் அபோட் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக புடினுடன் பேசுவதால், ஜி-20 மாநாட்டுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் இது தொடர்பாக மாநாட்டில் அவருடன் ஆலோசிக்க விரும்பவில்லை. அதனால் மாநாடு நடப்பதற்கு முன்பே புடினுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளேன். அவர் கட்டாயம் எனது கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இதிலிருந்து அவர் தப்பித்துக் கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார்.