Home தொழில் நுட்பம் எபோலா பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்க பேஸ்புக்கில் புதிய முயற்சி!

எபோலா பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்க பேஸ்புக்கில் புதிய முயற்சி!

603
0
SHARE
Ad

cnwintech-facebook-logoகோலாலம்பூர், நவம்பர் 8 – எபோலா நோய் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான நிதியினை சேகரிக்க பேஸ்புக் நிறுவனம் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது.

அதாவது பயனர்களின் பேஸ்புக் பக்கங்களில் ‘டொனேட்’ (Donate) என்ற புதிய குறியீட்டை இணைத்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் எபோலா நோய் தாக்குதலில் பாதிகப்பட்டோருக்கு, தங்களால் முடிந்த நிதி உதவியினை நேரடியாக குறிப்பிட்ட சில தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க முடியும்.

இதன் மூலம் சேர்க்கப்படும் நிதியானது, ‘அனைத்துலக மருத்துவ பிரிவு’ (International Medical Corps), ‘அனைத்துலக செஞ்சிலுவை கூட்டமைப்பு’ (International Federation of Red Cross), ‘ரெட் க்ரெசண்ட் அமைப்புகள்’ (Red Crescent Societies) ஆகிய இலாப நோக்கமற்ற அமைப்புகள் மூலமாக எபோலா பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கப்பட இருக்கின்றது.

#TamilSchoolmychoice

Ebola_virus_virionஅதுமட்டுமல்லாமல் பேஸ்புக் நிறுவனம் லைபீரியா மற்றும் சியரா லியோன் போன்ற எபோலா நோய் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு 100 முனையங்கள் மூலமாக இணையம் மற்றும் தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தும் வசதிகளும் செய்து கொடுக்க முடிவு செய்துள்ளது.

இந்த பகுதிகளில் இதுவரை 5000-க்கும் அதிகமானோர், எபோலா நோய் தாக்குதலில் பலியாகி உள்ளனர். தொலைத் தொடர்புகள் பெரும்பான்மையாக துண்டிக்கப்பட்டுள்ள இந்தப் பகுதிகளில், இணையத்தை ஏற்படுத்த பேஸ்புக் நிறுவனம் பல்வேறு  முயற்சிகளை  எடுத்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

எபோலா பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மார்க் சக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் ஆகிய இருவரும் சுமார் 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஏற்கனவே நிதி உதவியாக அளித்துள்ள நிலையில், பேஸ்புக் பயனர்கள் மூலமாகவும் நிதி திரட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதற்கு உலக நாடுகள் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளன.