Home அவசியம் படிக்க வேண்டியவை திருநங்கைகளுக்கு ஆதரவாக மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு – ஆண்கள் போன்று உடுத்துவதில் தவறில்லை

திருநங்கைகளுக்கு ஆதரவாக மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு – ஆண்கள் போன்று உடுத்துவதில் தவறில்லை

705
0
SHARE
Ad

Malaysia Courtsபுத்ராஜெயா, நவம்பர் 8 – நேற்று மேல் முறையீட்டு நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய திருப்பு முனையான தீர்ப்பின் மூலம் திருநங்கைகளின் குறிப்பாக முஸ்லீம் திருநங்கைகளின் உரிமை நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

நெகிரி செம்பிலான் மாநில இஸ்லாமிய சட்டவிதிகளின்படி முஸ்லீம் ஆண்கள், பெண்கள் போன்று உடை உடுத்துவதும், பெண்கள் போன்று நடந்து கொள்வதும் குற்றம் என்ற சட்டவிதி உள்ளது. ஆனால் இந்த சட்டவிதி மலேசிய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு முரணானது என்பதால் செல்லாது என மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1992ஆம் ஆண்டின் நெகிரி செம்பிலான் மாநில ஷாரியா குற்றவியல் சட்டவிதி 66 (Syariah Criminal (Negri Sembilan) Enactment 1992) மலேசிய அரசியல் சாசனத்திற்கு முரணானது என மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் முறையீட்டு நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பை நீதிபதி முகமட் ஹிஷாமுடின் முகமட் யூனுஸ் வாசித்தார்.

#TamilSchoolmychoice

மலேசிய அரசியல் சாசனம் சிறுபான்மையினரை, பெரும்பான்மையினரின் அடக்குமுறையிலிருந்து பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது என்று கூறிய நீதிபதிகள், இதன் காரணமாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தாங்கள் நிராகரிப்பதாகத் தங்களின் தீர்ப்பில் கூறினர்.

இந்த தீர்ப்பின் காரணமாக, மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற சட்டவிதிகள் இயற்றப்பட்டிருப்பின் அவையும் செல்லாததாகிவிடும்.

முகமட் ஜூசாலி முகமட் காமிஸ் (26), சுக்கோர் ஜானி (28), வான் ஃபாய்ரோல் வான் இஸ்மாயில் (30) ஆகிய மூவரும் கடந்த 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி மேற்குறிப்பிட்ட 66வது சட்டவிதி செல்லாது என வழக்கு தொடுத்திருந்தனர்.

இந்த சட்டவிதியின்படி ஒருவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனையையும், 1,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.

இதற்கு முன்னர் இந்த வழக்கை விசாரித்த சிரம்பான் உயர் நீதிமன்றம், வழக்கு தொடுத்த மூவரும் முஸ்லீம் ஆண்களாகப் பிறந்த காரணத்தால் இஸ்லாமிய சட்டவிதிகளை அவர்கள் பின்பற்ற வேண்டும் என தீர்ப்பளித்திருந்தது.