Home உலகம் அனைத்துலக மாநாட்டில் ஒபாமாவை சந்திக்கிறார் விளாடிமிர் புடின்!

அனைத்துலக மாநாட்டில் ஒபாமாவை சந்திக்கிறார் விளாடிமிர் புடின்!

500
0
SHARE
Ad

obama vs puthinமாஸ்கோ, நவம்பர் 10 – சீனா மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் அனைத்துலக மாநாடுகளில் பங்கேற்க இருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேச இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

உக்ரைன் விவகாரம் காரணமாக,  ரஷ்யாவிற்கும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்குமிடையே  கடும் பனிப் போர் நிகழ்ந்து வருகின்றது. இதன் காரணமாக இந்நாடுகளின் தலைவர்களுக்கு இடையே சம்பிரதாயப் பேச்சுவார்த்தைகள் கூடப் பெரிதாக தடைபட்டு இருந்தன.

இந்நிலையில், விரைவில் தொடங்க இருக்கும் இந்த மாநாடுகள் மூலம், பல மாதங்களாகத் தடைபட்டு இருந்த பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக புடினின் வெளிநாட்டுத் துறை விவகார ஆலோசகர் யூரி உஷகோவ் கூறியதாவது:- “உலகத் தலைவர்களுடனான பேச்சுவார்த்தையை புடின் ஒரு போதும் தட்டிக் கழிக்கமாட்டார்.”

“இது போன்ற சந்தர்ப்பங்களை புடின் வரவேற்கும் குணமுடையவர். எனினும் இந்த பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமற்றதாக இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

இவர்களின் சந்திப்பின் போது அனைத்துலக பொருளாதார வளர்ச்சி மற்றும்  தீவிரவாத ஒழிப்பு பற்றி விவாதிக்கப்படும் என்று அமெரிக்க வட்டாரங்கள் கூறுகின்றன.

எனினும், உக்ரைன் விவாகாரம் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் இடையே விவாதிக்கப்படுமா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளிவர வில்லை.

முன்னதாக கடந்த ஜூன் மாதம் உக்ரைன்  போராளிகள் குறித்து ரஷ்யாவின் நிலைப் பாட்டினை அறிந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா  ரஷ்ய அதிபர் புடினை சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.