Home நாடு மகாதீர் கூறும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்கிறோம் – சிலாங்கூர் அம்னோ

மகாதீர் கூறும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்கிறோம் – சிலாங்கூர் அம்னோ

569
0
SHARE
Ad

Mahathir (500x333)கோலாலம்பூர், நவம்பர் 10 –  தங்களைப் பற்றி முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கும் கடும் விமர்சனங்களை ஒரு தந்தையின் கூறும் அறிவுரையாக ஏற்றுக் கொள்வதாக சிலாங்கூர் மாநில அம்னோ தலைவர்கள் கூறியுள்ளனர்.

சிலாங்கூர் தேசிய முன்னணி எப்போது விமர்சனங்களை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளும், குறிப்பாக மூத்த அரசியல் தலைவரான மகாதீர் இந்த நாட்டிற்காக உழைத்தவர். அவர் சொல்வதை தாங்கள் ஏற்றுக் கொள்வோம் என சிலாங்கூர் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ நோ ஓமார் தெரிவித்துள்ளார்.

மகாதீர் கூறியது படி, கட்சியில் தேவையான மாற்றங்களை செய்வோம் என்றும் அவர் உறுதி கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

சிலாங்கூ அம்னோ தற்போது தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து தன்னை பலப்படுத்தி வருகின்றது என்றும், அடுத்த பொதுத்தேர்தலுக்கு இப்பொழுதே தயாராகி வருகின்றது என்றும் நோ ஓமார் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம், சிலாங்கூர் அம்னோ தலைவர்கள் குறித்து மகாதீர் தனது வலைத்தளத்தில் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

சிலாங்கூர் தலைவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து புதியவர்களுக்கு வழி விட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, பிபிபி கட்சித் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் கூறுகையில், பக்காத்தானிடமிருந்து சிலாங்கூரை மீட்க சிலாங்கூர் தேசிய முன்னணிக்கு தங்கள் கட்சி எப்போதும் உதவி செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.