Home உலகம் பிரேசில் எச்எஸ்பிசி வங்கியில் ஒரே வாரத்தில் 1000 பேர் பணி நீக்கம்!

பிரேசில் எச்எஸ்பிசி வங்கியில் ஒரே வாரத்தில் 1000 பேர் பணி நீக்கம்!

736
0
SHARE
Ad

hsbc15_0பிரேசிலியா, நவம்பர் 10 –  பிரேசில் நாட்டில் முன்னணி வங்கியாகத் திகழ்ந்து வரும் எச்எஸ்பிசி, ஒரே வாரத்தில் 1000 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. இதன் காரணமாக அங்கு வங்கி ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரேசில் நாட்டில் இயங்கும் எச்எஸ்பிசி வங்கியின் தலைமை அலுவலகம் இலண்டனில் உள்ளது. ஐரோப்பா உட்பட பெரும்பான்மையான நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி காரணமாக வங்கிகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.

இந்நிலையில், பிரேசில் மற்றும் மெக்சிகோவில் செயல்பட்டு வந்த எச்எஸ்பிசி வங்கியின், கடந்த வாரம் வர்த்தகம் 56 சதவிகித்திற்கும் குறைவாகவே இருந்தது.

#TamilSchoolmychoice

HSBC Bankஇதனால் வங்கி, ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்தது. அதன்படி வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ஒரே வாரத்தில் 1000 பேர் பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது.

இந்த திடீர் ஆட்குறைப்பு காரணமாக ஆத்திரமடைந்த வங்கி ஊழியர்கள், தங்கள் தொழிற்சங்கம் மூலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், வங்கி ஊழியர்களின் கோரிக்கையை ஏற்க எச்எஸ்பிசி மறுத்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.