Home கலை உலகம் கமலஹாசன் முன்பு ஆட வெட்கப்பட்டு நெளிந்த விஜய்! (காணொளி உள்ளே)

கமலஹாசன் முன்பு ஆட வெட்கப்பட்டு நெளிந்த விஜய்! (காணொளி உள்ளே)

599
0
SHARE
Ad

Vijay-meets-Kamal-Haasanசென்னை, நவம்பர் 11 – உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட விஜயை, கமல் ஆடச் சொன்னபோது ரொம்பவே வெட்கப்பட்டு, சங்கோசப்பட்டு நெளிந்த காணொளி காட்சி இணையதளங்களில் தீயாக பரவி வருகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த 7-ம் தேதி தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடினார். தூய்மை இந்தியா திட்டத்தை துவங்கி வைத்த அவர் தனக்கு நெருக்கமானவர்களுக்கு சென்னையில் உள்ள நட்சத்திர தங்கும் விடுதி ஒன்றில் விருந்தளித்தார்.

அந்த விழாவில் கமல்ஹாசன் கேக் வெட்டி அதை கௌதமிக்கும், அவரது மகளுக்கும் அளித்தார். விழாவில் கலந்து கொண்ட இளைய தளபதி விஜய் வழக்கம் போல் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

#TamilSchoolmychoice

அப்போது ‘இளமை இதோ இதோ’… என்ற பாடல் ஒலிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பாட்டுக்கு கமல் ஆடி அனைவரையும் கலகலக்க வைத்தார். கூடவே, அவர் விஜய்யின் கையை பிடித்து ஆடுமாறு கூறினார்.

ஆனால் விஜய்யோ வெட்கத்தில் கையை மட்டும் ஆட்டினார். பாடலில் வரும் ‘இளமை இதோ இதோ’…. என்ற வரிக்கு கமல், விஜய்யைப் பார்த்து விரலைக் காட்டி கலகலப்பை ஏற்படுத்தினார்.

அதேபோல ‘காலேஜு டீன் ஏஜு பெண்கள்’ என்ற வரி வந்தபோது, அவர் ராதிகாவைக் கையைக் காட்டி கலகலப்பூட்டினார். ஆனால் அவர்களோ கமலைப் பார்த்து கையைக் காட்டி மேலும் கலகலப்பை ஏற்படுத்தினர்.

விஜய்யின் வெட்கத்தைப் பார்த்த ராதிகாவும் அவரது கையை பிடித்து ஆட வைக்க முயன்றார். ஆனாலும் விஜய் ஆடவில்லை. மாறாக கையை, காலை மட்டும் அசத்தார். விஜய் வெட்கத்தில் நெளியும் காணொளியை யாரோ ஒரு பிரபலம் வெளியிட அது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

http://youtu.be/piAQpJnvKeA