Home நாடு பினாங்கில் தொடரும் மியான்மர் நாட்டினர் கொலை சம்பவங்கள் – மக்கள் அச்சம்

பினாங்கில் தொடரும் மியான்மர் நாட்டினர் கொலை சம்பவங்கள் – மக்கள் அச்சம்

548
0
SHARE
Ad

myanmar newஜார்ஜ் டவுன், நவம்பர் 11 – கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஜாராக் அடாஸ், தாசிக் கெலுகோர் அருகே மற்றொரு மியான்மர் நாட்டு ஆடவரின் சடலத்தை பினாங்கு மாநில காவல்துறை கைப்பற்றியுள்ளது.

இந்த வருடத்தில் மட்டும் பினாங்கு மாநிலத்தில், இந்த ஆடவரோடு சேர்த்து 20 மியான்மர் நாட்டினர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தொடர் கொலைகளுக்கு பின்னணியில் உள்ள கொலைகாரன் யார்? ஒருவரா அல்லது கும்பலா? என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

#TamilSchoolmychoice

எனினும், இந்த கொலைக்கும், இதற்கு முன்பு கொல்லப்பட்ட 19 மியான்மர் நாட்டினர் கொலைகளுக்கும் தொடர்பு இல்லை என்றும் பினாங்கு குற்றப்புலனாய்வுத் துறையின் மூத்த துணை ஆணையர் மஸ்லான் கேசா தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள சடலத்தின் கழுத்து அறுக்கப்பட்டுள்ளதோடு, மார்பு, வயிறு, புட்டம் ஆகிய இடங்களில் கத்தி குத்துகள் காணப்பட்டுள்ளன.

வேறு எங்காவது இந்த அடவர் கொலை செய்யப்பட்டு, இந்த பகுதியில் வீசப்பட்டிருக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

மியான்மர் நாட்டினர் தொடர்ச்சியாக பினாங்கில் கொலை செய்யப்படுவது அம்மாநிலத்தில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட பலர் வெள்ளை துணி, மெத்தை அல்லது சாரோங் ஆகியவற்றில் சுற்றப்பட்டு சாலை ஓரத்தில் வீசப்பட்டிருந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.