Home நாடு 6 பேர் படுகொலை: 9 மியான்மர் நாட்டவர்கள் மீது குற்றச்சாட்டு!

6 பேர் படுகொலை: 9 மியான்மர் நாட்டவர்கள் மீது குற்றச்சாட்டு!

652
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 16 – மியான்மரைச் சேர்ந்த 9 பேர் மீது சக நாட்டவர்கள் 6 பேரை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தங்களது தாய்நாட்டில் நடைபெற்ற இனக்கலவரம் தொடர்பான பழிவாங்கும் நடவடிக்கையாகவே இப்படுகொலைகளை 9 பேரும் செய்திருப்பதாக மலேசிய போலீசார் கருதுகின்றனர்.

9 Myanmar arrested - 2

குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் 22 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புண்டு. 9 பேர் மீதான கொலை வழக்கு பினாங்கு நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த ஓராண்டுக்கு காலமாக இருபதுக்கும் மேற்பட்ட மியான்மர் நாட்டவர்கள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் படுகொலை செய்யப்பட்டனர். குறிப்பாக பினாங்கு மாநிலத்தில்தான் அதிகமான மியான்மர் நாட்டவர்கள் கொல்லப்பட்டனர். இதனால் பொதுமக்களிடையே அச்சம் நிலவியது.

அதிலும், கொலை செய்யப்பட்டவர்களின் உடல் பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் வீசப்பட்டதால் பினாங்கு போலீசார் குழப்பமடைய நேரிட்டது. எனினும் திறமையாக விசாரணை நடத்தி பினாங்கில் உள்ள ஒரு வீட்டில் வைத்தே பலர் படுகொலை செய்யப்பட்டனர் என்பதை கண்டுபிடித்தனர்.

9 Myanmar arrested

இதையடுத்து தற்போது குற்றம்சாட்டப்பட்டுள்ள 9 பேரும் கைதாகினர். மேலும் 4 பேர் இப்படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாக தேடப்பட்டு வருகிறார்கள்.

மியான்மரில், ராக்கைன் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள புத்த மதத்தினருக்கும், சிறுபான்மையினராக உள்ள ரோஹின்யா என்ற இஸ்லாமிய பிரிவினருக்கும் இடையே மோதல் நிலவுகிறது. இதனால் கடந்த 2012இல் ஏற்பட்ட கலவரத்தில் 200 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தக் கலவரத்திற்குப் பழிவாங்கும் விதமாகவே மலேசியாவில் மியான்மர் நாட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

படங்கள்: EPA