பட்டர்வொர்த், டிசம்பர் 17 – பினாங்கில் மியான்மர் நாட்டவர்கள் பலர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது தொடர்பிலான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 சந்தேக நபர்களின் காவல் டிசம்பர் 23-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அங்குள்ள நீதிமன்றம் பிறப்பித்தது.
படுகொலை வழக்கு தொடர்பிலான விசாரணையை முடிக்க கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக காவல்துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த துணைப் பதிவாளர் அகமட் ஃபெய்ஸ் சைன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
30 வயதுக்குட்பட்ட 3 சந்தேக நபர்களும் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். பினாங்கில் நடைபெற்ற தொடர் படுகொலைச் சம்பவங்கள் அங்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஒரு பெண் உட்பட 20 மியான்மர் நாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். இவர்களில் 6 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே மேலும் ஒரு சந்தேக நபருக்கு காவல்துறையினர் வலை வீசியுள்ளனர். தொடர் படுகொலைகளில் மியான்மர் நாட்டவர்கள் அடங்கிய இரு குழுக்களுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை நம்புகிறது.