Home நாடு புக்கிட் மெர்தாஜம்: 2 சடலங்கள் கண்டெடுப்பு – பினாங்கை உலுக்கும் மர்மம்!

புக்கிட் மெர்தாஜம்: 2 சடலங்கள் கண்டெடுப்பு – பினாங்கை உலுக்கும் மர்மம்!

615
0
SHARE
Ad

murderபுக்கிட் மெர்தாஜம், டிசம்பர் 26 – வெளிநாட்டவர்கள் என நம்பப்படும் இரு ஆடவர்களின் சடலங்கள் நேற்று வியாழக்கிழமை அன்று மாச்சங் புபோப் பகுதியில் உள்ள ஜாலான் சுங்கை லெம்புவின் இரு வெவ்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டன.

அழுகிய நிலையிலும், வலது கை இல்லாமலும் உள்ள ஆடவரின் சடலத்தை வியாழக்கிழமை காலை 11 மணியளவில் பொது மக்கள் கண்டதாக பினாங்கு குற்றப் புலனாய்வு (சிஐடி)பிரிவு துணை தலைவர் குணராஜன் தெரிவித்தார்.

“அந்த ஆடவருக்கு சுமார் 30 வயதிருக்கும் என கருதப்படுகிறது. சடலம் அழுகிய நிலையில் இருப்பதால் அவர் 4 நாட்களுக்கு முன்பே கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும்,” என குணராஜன் செய்தியாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

கொலையுண்ட நபர் தொடர்பாக எந்தவித அடையாள ஆணவங்களும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், அந்நபர் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றார்.

“அதன் பின்னர் இரண்டு அல்லது மூன்று பேர் சடலத்தை இப்பகுதியில் கொண்டு வந்து போட்டிருக்க வேண்டும். மற்றொரு ஆடவரின் சடலம் வியாழக்கிழமை மதியம் 1.30 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது. இரண்டாவது சடலத்தில் எந்தவித காயங்களுக்கான தடயங்களும் இல்லை. எனவே இரு சடலங்களுக்கும் இடையே தொடர்பு இருக்குமெனக் கருதவில்லை. எனினும் ஆள் அரவமற்ற இப்பகுதிக்கு கொலையாளிகள் எப்படி வந்து சென்றனர் என தீர விசாரித்து வருகிறோம்,” என்றார் குணராஜன்.

முதல் நபர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும், இரண்டாவது ஆடவர் எதிர்பாராத விதமாக இறந்திருக்க வேண்டும் என்றும் பினாங்கு காவல்துறை உத்தேசமாகத் தெரிவித்துள்ளது.

பினாங்கு மாநிலத்தில் இதுபோன்ற மர்மக் கொலைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருவது மக்களிடையே பீதியைக் கிளப்பியுள்ளது.