Home உலகம் கடும் பொருளாதார சரிவில் சவுதி அரேபியா!

கடும் பொருளாதார சரிவில் சவுதி அரேபியா!

930
0
SHARE
Ad

Saudi Arabia Mapரியாத், டிசம்பர் 26 – சவுதி அரேபியா, கச்சா எண்ணெய் வீழ்ச்சியால் தங்கள் நாட்டில் ஏற்பட இருக்கும் பொருளாதார பற்றாக்குறை தொடர்பான முழுமையான தகவல்கள் அடங்கிய நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சவுதியின் மிக முக்கிய ஏற்றுமதியான கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி, அந்நாட்டை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது. வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் விலை சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. அதன் காரணமாகவே இந்தத் தகவலை அந்நாடு வெளியிட்டுள்ளது.

2015-ம் ஆண்டில் சவுதியின் பொருளாதாரப் பற்றாக்குறை 38 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டும் என அந்நாட்டில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

Petroleum Oil in barrelsகடந்த மூன்று ஆண்டுகளில் சவுதி அரேபியாவின் வரவு செலவு திட்டத்தில் பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படுவது இதுவே முதல் முறை. மேலும், சவுதியின் சரித்திரத்தில் இந்த அளவுக்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி நெருக்கடி ஏற்படுவதும் இதுவே முதல் முறை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருந்தாலும், தங்கள் செலவினங்களில் எந்தக் குறைப்பும் இருக்காது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகையில், “சிக்கன நடவடிக்கைகள் ஏதும் எடுக்காமலேயே, எண்ணெய் விலை வீழ்ச்சியிலிருந்து அரசு மீண்டுவிடும்” என்று கூறியுள்ளனர்.

2013-ம் ஆண்டு ஜூன் மாதத்தை ஒப்பிடுகையில், இந்தாண்டில் எண்ணெய் விலை பாதியாகக் குறைந்துள்ளது.உற்பத்தியில் தேக்க நிலை, உலகளவில் குறைந்துள்ள எண்ணெயின் தேவை மற்றும் உயர்ந்து வரும் டாலரின் மதிப்பு ஆகியவை சவுதியின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணங்களாக கூறப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருவதால் தான் உலகப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணமாகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.