Home வணிகம்/தொழில் நுட்பம் இந்தியாவில் சியாவுமி வர்த்தக சாதனை: 1 மில்லியன் திறன்பேசிகள் விற்பனை!

இந்தியாவில் சியாவுமி வர்த்தக சாதனை: 1 மில்லியன் திறன்பேசிகள் விற்பனை!

541
0
SHARE
Ad

புது டெல்லி, டிசம்பர் 26 – இந்தியாவில் 1 மில்லியன் திறன்பேசிகளை விற்பனை செய்துள்ளதாக சியாவுமி நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம், இந்தியாவில் தனது விற்பனையைத் தொடங்கிய சீன நிறுவனமான சியாவுமி, 6 மாதங்களுக்கும் குறைவான காலத்தில் 1 மில்லியன் திறன்பேசிகள் விற்பனை என்ற பெரும் வர்த்தக இலக்கினை அடைந்துள்ளது.

xiaomi_redmi_note_official-630x460

இது தொடர்பாக சியாவுமி நிறுவனத்தின் துணைத் தலைவர் ஹுகோ பர்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில், சியாவுமி திறன்பேசிகளின் விற்பனை தொடங்கப்பட்ட 5 மாத காலங்களுக்குள் 1 மில்லியனைத் தாண்டியுள்ளது. இதற்கு இந்திய வாடிக்கையாளர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். இது எங்களுக்கு மேலும் ஊக்கத்தை அளிக்கின்றது” என்று அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்தியாவில் சியாவுமி நிறுவனம், ப்ளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து இணைய வர்த்தகம் மூலம் இத்தகைய சாதனையை நிகழ்த்தி உள்ளது. பல தருணங்களில் விற்பனை தொடர்பான சலுகை அறிவிப்புகள் வெளியான சில நிமிடங்களில்   சியாவுமி தயாரிப்புகள் விற்று தீர்ந்ததுள்ளன. அந்நிறுவனத்தின் தயாரிப்புகள் மலிவு விலையில் தரமிக்கவையாகவும், மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு நிகரானவையாகவும் இருக்கின்றன.

இதுவரை இந்தியாவில், சியாவுமி ‘மி3’ (Mi 3), ‘ரெட்மி 1எஸ் நோட்’ (RedMi Note) ஆகிய தயாரிப்புகளை மட்டுமே விற்பனை செய்து வருகின்றது. விரைவில் ரெட்மி நோட்டின் 4ஜி பதிப்பை வெளியிட தீர்மானித்துள்ளது.

எனினும், காப்புரிமை தொடர்பான வழக்கில் அந்நிறுவனம் சிக்கி உள்ளதால், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியாவில் விற்பனை செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் சியாவுமிக்கு தற்காலிகத் தடை  விதித்தது.

பின்னர் மேல்முறையீட்டின் மூலம், ஜனவரி 8-ம் தேதி வரை அந்த தடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சியாவுமி, எதிர்த்தரப்பு நிறுவனத்துடன் சமரசம் மேற்கொள்ளாதவரை, விற்பனை தொடர்பான இடையூறுகள் அந்நிறுவனத்தை பெரிதும் பாதிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.