Home நாடு வாஜ்பாய்க்கு 90ஆவது பிறந்த நாள்: பிரதமர் மோடி நேரில் வாழ்த்து

வாஜ்பாய்க்கு 90ஆவது பிறந்த நாள்: பிரதமர் மோடி நேரில் வாழ்த்து

611
0
SHARE
Ad

modiபுதுடெல்லி, டிசம்பர் 27- முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த வியாழக்கிழமை டிசம்பர் 25ஆம் தேதி தமது 90ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்நிலையில் அவரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து தமது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
வாஜ்பாய்க்கு பிறந்தநாள் பரிசாக பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்துள்ளது இந்திய அரசு.

முன்னதாக வாஜ்பாய் பிறந்த நாளை ‘நல்லாட்சி நாளாக’ கொண்டாட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார். நாட்டுக்கு நல்லாட்சி தர வேண்டும் என வாஜ்பாய் பிறந்தநாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த சூழ்நிலையில் பிறந்தநாள் கொண்டாடிய வாஜ்பாயை அவரது இல்லத்திற்கே நேரடியாகச் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் மோடி.

#TamilSchoolmychoice

முன்னதாக தனது சமூகவலைதளப் பக்கத்தில், “நல்லாட்சியும், வளர்ச்சியும் நம் முன் இருக்கும் ஒரே பாதை. எனவே அனைவரும் ஒன்றாக இணைந்து மக்களின் வாழ்க்கையில் நல்லது நடக்கவும், வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை உருவாக்கவும் பாடுபடுவோம்,” என மோடி கூறியுள்ளார்.