Home வாழ் நலம் குடல் புண்களை குணப்படுத்தும் வெண்டைக்காய்!

குடல் புண்களை குணப்படுத்தும் வெண்டைக்காய்!

780
0
SHARE
Ad

Fresh Ocra (Ladies Fingers)நவம்பர் 11 – வெண்டைக்காயில் இருக்கும் முதல் தரமான நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உணவுப் பாதையை சரியாக இயங்கச் செய்து சர்க்கரைச் சத்தை பாதுகாக்கிறது.

கரையும் தன்மை, கரையாத் தன்மை என இருவித நார்ச்சத்தை வெண்டைக்காய் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வெண்டைக்காயில் கொழகொழப்புமிக்க தன்மை ரத்தத்தில் கொழுப்புத்தன்மை மற்றும் பித்த நீர் அதிகரிக்கா வண்ணம் அவற்றை ஈரலின் துணை கொண்டு கட்டுப்படுத்துகிறது.

வெண்டைக்காயிலுள்ள வழவழப்புப்பொருள் பெருங்குடலின் உட்பகுதியில் பதிந்து பெருங்குடலின் செயலைச் செம்மைப்படுத்துகிறது. இயந்திரத்துக்கு எண்ணெய் இடுவதுபோல இது பெருங்குடலுக்கு ஒரு எண்ணெய் போல பயன் தருகிறது.

#TamilSchoolmychoice

வெண்டைக்காயிலுள்ள வழுவழுப்பான திரவம் கொழுப்புச் சத்தையும் உணவிலுள்ள நச்சுப்பொருள்களையும், பித்த நீரையும் கட்டுப்படுத்தி வெளியேற்ற வல்லது.  இதனால் குடலில் ஏற்படுகிற பல்வேறு நோய்கள் தவிர்க்கப்படுகிறது.

okra-gravyவெண்டைக்காய் ஒரு ஆரோக்கியத்தின் காவலனாக செயல்பட்டு தேவையின்றி தேங்கும் கழிவுகளையும் நச்சுத்தன்மையும் உடலை விட்டு வெளியேற்ற உதவுகிறது.  வெண்டைக்காய் உடலுக்குத் தேவையான நல்ல உயிர் அணுக்களுக்கு ஊட்டம் தருவதாக அமைகிறது.

வெண்டைக்காய் மூட்டுக்களில் ஏற்படும் தேய்மானத்தையும், மூட்டுத் தேய்வால் ஏற்பட்ட காயத்தையும் குணப்படுத்தி மூட்டுக்கள் சரிவர இயங்குவதற்கு உபயோகப்படுகிறது. வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மை குடலின் உட்பகுதியில் படிந்து குடல் புண்ணாகாமல் பாதுகாப்பதோடு புண்களையும் ஆற்றுகிறது.

வெண்டைக்காய் நூரையீரல் வீக்கத்தையயும், மூச்சு விடுவதில் சிரமத்தையும் தணிக்க வல்லது. மேலும் தொண்டைக்கட்டு, தொண்டைப்புண்களையும் ஆற்ற வல்லது.  கோடை காலத்தில் ஏற்படும் பல்வேறு நோய்களை தணிக்க வல்லதாக வெண்டைக்காய் உள்ளது.

அதுமட்டுமின்றி ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு நோயைத் தணிக்கக் கூடியது. வெண்டைக்காயை அன்றாடம் உணவில் சேர்ப்பதால் ரத்த நாளங்கள், நரம்புகள் வீக்கம், அடைப்பு ஆகியவை வராமல் தடுப்பதோடு வந்த பின்னும் குணப்படுத்தவல்ல மருந்தாக பணி செய்யும்.

okra_1_வெண்டைக்காயைத் தாராளமாக உபயோகப்படுத்துவதால் சிலவகை புற்நோய்களைக் கட்டுப்படுத்துகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மலக்குடலுக்கும் ஆசன வாய்க்கும் இடையே மலம் தங்குவதால் ஏற்படும் புற்றுக்கு ஒரு மருந்தாக அமைகின்றது.

வெண்டைக்காயில் உள்ள மருத்துவ வேதிப்பொருள்கள் முடி போன்ற சிறுசிறு ரத்த நாளங்களை ஆரோக்கியமாகச் செயல்பட வைக்கிறது. இதனால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி தோல் மென்மையும் பளபளப்பும் பெறுகிறது.