இரண்டு முறை மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனைகளிலும், சோங் வெய் அம்மருந்து பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் காணப்பட்டதாக அண்மையில் மலேசிய பூப்பந்து சங்கம் அறிவித்தது.
இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து பிடபள்யூஎப் முழு விசாரணை நடத்தும் வரை லீ சோங் வெய் எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மலேசிய பூப்பந்து சங்கத்தின் தலைவர் டத்தோ நோர்ஸா ஜக்காரியா கூறுகையில், “பிடபள்யூஎப் வெகு விரைவில் விசாரணை நடத்தும் தேதியை நிர்ணயிக்கும் என்று நம்புகின்றோம். 32 வயதாகும் சோங் வெய்க்கு இவ்வழக்கில் ஈராண்டு தண்டனைக்குப் பதிலாக இலகுவான தண்டனையைப் பெற வழியமைக்கும் வகையில் லண்டனிலுள்ள விளையாட்டுத்துறை வழக்கறிஞர் மைக்மோர்கனை மலேசிய பூப்பந்து சங்கம் அமர்த்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.