Home வாழ் நலம் 20 வகையான நோய்களை குணப்படுத்தும் அருகம்புல்!

20 வகையான நோய்களை குணப்படுத்தும் அருகம்புல்!

1940
0
SHARE
Ad

mooligai19நவம்பர் 12 – அருகம்புல்லின் துளிர் இலைகள், அதன் தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்களை உடையன ஆகும். அறுகம்புல் தோலின் மேல் ஏற்படும் வெண்புள்ளிகளை குணப்படுத்த வல்லது.

மேலும் சிறுநீரகக் கோளாறுகள்,சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல் உட்பட, ஆஸ்துமா என்னும் மூச்சு முட்டல், உடலில் ஏற்படும் துர்நாற்றம், நெஞ்சுச்சளி, தீப்புண்கள், கண்களில் ஏற்படும் தொற்று நோய்கள், உடற்சோர்வு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை சத்து அதிகப்படுதல், வயிற்றுப் போக்கு ஆகிய நோய்களையும் போக்க வல்லது.

மேற்கூறிய நோய்கள் மட்டுமின்றி பின்வரும் பெயர்களுடைய ஏராளமான நோய்களையும் அறுகம்புல் குணப்படுத்த வல்லது.

#TamilSchoolmychoice

1.புற்று நோய்க்கு எதிரானது.

2.சர்க்கரை நோயை சீர் செய்ய வல்லது.

3.வயிற்றுப் போக்கை குணப்படுத்துவது.

4.குமட்டல், வாந்தி இவற்றை தணிக்கக் கூடியது.

5.நுண்கிருமிகளைத் தடுக்க வல்லது.

6.உற்சாகத்தைத் தரவல்லது.

7.மூட்டுவலிகளைத் தணிக்கக் கூடியது.

8.கிருமித் தொற்றினைக் கண்டிக்க வல்லது.

9.ஆஸ்துமாவை குணப்படுத்தும்.

sl213410.தீப்புண்களை குணமாக்கும்.

11.கருத்தடைக்கு உகந்தது.

12.குளிர்ச்சி தரவல்லது.

13.மேற்பூச்சு மருந்தாவது.

14.சிறுநீரைப் பெறுக்க வல்லது.

15.நெஞ்சுச்சளியை போக்கக் கூடியது.

16.ரத்தத்தை உறையவைக்கும் தன்மை உடையது.

17.மலத்தை இளக்கக் கூடியது.

18.கண்களுக்கு மருந்தாவது.

19.உடலுக்கு உரமாவது.

20.ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்த கூடியது.

21.காயங்களை ஆற்ற வல்லது.

இப்படி நீண்ட பட்டியலைக் கொண்டுள்ள நோய்களை வேரறுக்க வல்லதாக அருகம்புல் திகழ்கிறது.

ht2340அருகம்புல்லின் மருத்துவப் பயன்கள்: 

அருகம்புல்லின் தண்டுப் பகுதி மற்றும் வேர்ப்பகுதி ஆகியன பாரம்பரியம்மிக்க நாட்டு மருத்துவத்தில் இதயக் கோளாறுகளைப் போக்க உபயோகித்து வரப்படுகிறது.

சர்க்கரையை குறிப்பாக ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கும் தன்மையுடையது. அருகம்புல்லில் அடங்கியுள்ள மேனிட்டால் மற்றும் சேப்போனின்ஸ் எனும் சத்துக்கள் சிறுநீரைப் பெருக்க உதவுகிறது.

பசியைத் தூண்டக் கூடியது, காயங்களை ஆற்றவல்லது. வயிற்றிலுள்ள பூச்சிகளை, புழுக்களை வெளியேற்ற வல்லது. காய்ச்சலைத் தணிக்க வல்லது, ஞாபக சக்தியைப் பெருக்க வல்லது. மேலும் அறுகம்புல் வாய் துர்நாற்றத்தையும் வேண்டாத நாற்றத்தையும் போக்க வல்லது.