Home நாடு மலேசியக் காற்பந்து ஜாம்பவான் மொஹ்தாரின் 61-வது பிறந்தநாளை கொண்டாடிய கூகுள்!

மலேசியக் காற்பந்து ஜாம்பவான் மொஹ்தாரின் 61-வது பிறந்தநாளை கொண்டாடிய கூகுள்!

505
0
SHARE
Ad

Google_Doodle_Supermokh1311_840_462_100கோலாலம்பூர், நவம்பர் 13 – இன்று காலை கூகுள் தேடலை திறந்த மலேசியர்களுக்கு ஒரு பேரின்பம் காத்திருந்தது.

மலேசியாவின் புகழ்பெற்ற காற்பந்து விளையாட்டு ஜாம்பவனான மொஹ்தார் டஹாரியின் 61வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இன்று அவரது புகைப்படத்தை கூகுள் டூடுள்  வெளியிட்டிருந்தது.

சூப்பர்மொக் என்று அழைக்கப்படும் மொஹ்தார் டஹாரி தலைநகர் செதாபாக்கில் பிறந்தவர். மலேசிய காற்பந்தாட்ட அணியை ஆசிய அளவில் பலம் வாய்ந்த அணிகளான ஜப்பான், தென்கொரிய போன்றவற்றுடன் மோதும் அளவிற்கு திறமையாக வழிநடத்தியவர்.

#TamilSchoolmychoice

அனைத்துலக காற்பந்தாட்ட அணியான போக்கா ஜூனியர்சுடன், மலேசிய காற்பந்தாட்ட அணி நட்பு முறை ஆட்டம் ஒன்றை விளையாடிய போது அந்த அணியில் மொஹ்தாரும் ஒருவர்.

காற்பந்தாட்டத்தில் இருந்த வரை மொஹ்தார் சிலாங்கூருக்காக 175 கோல்களும், குவாங் யிக் வங்கிக்காக 13 ஆட்டங்களில் 20 கோல்களும், மலேசியாவிற்காக 125 கோல்களும் என மொத்தம் 320 கோல்கள் அடித்து சிலாங்கூர், மலேசியாவில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற சாதனையை மொஹ்தார் நிகழ்த்தியுள்ளார்.

கடந்த 1986-ம் ஆண்டு மே மாதம் சிலாங்கூருக்காக மலேசிய கோப்பையை பெற்றுத் தந்த பின்னர் காற்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வு பெற்ற சூப்பர்மோஹ் தனது 10-ம் எண் ஜெர்சியை சிலாங்கூர் ராஜா மூடாவிற்கு வழங்கி விட்டு சில காலம் பயிற்சியாளராக செயல்பட்டார். பின்னர் 1991-ம் ஆண்டு மொஹ்தார் காலமானார்.