பிரிஸ்பேன், நவம்பர் 15 – ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய மற்றும் சீன அதிபர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இன்று தொடங்கி ஜி-20 அமைப்பு மாநாடு நடைபெற உள்ளது. உலகின் மிகப் பெரிய பொருளாதார சந்தைகளைக் கொண்ட 20 மிகப் பெரிய நாடுகளின் கூட்டமைப்பாக இந்த அமைப்பு செயல்பட்டு வருகின்றது.
உலகத் தலைவர்கள் அனைவரும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தி வருகின்றனர்.
மேலும், கடந்த காலங்களில் இம்மாநாடுகள் நடைபெற்ற இடத்தில் முதலாளித்துவத்துக்கு எதிராக பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை நடத்தியுள்ளனர். குறிப்பாக கடந்த 2006-ம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற மாநாட்டின்போது, போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
ஜி20 – நாடுகளில் ஒன்றான இந்தியாவின் சார்பாக கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடியுடன் மற்ற நாடுகளின் தலைவர்கள்…
இதனால், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த ஆஸ்திரேலிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. பிரிஸ்பேனில் மாநாடு நடைபெறும் இடத்தில் சந்தேகத்துக்கிடமான எந்தவொரு நபரையும் சோதனை செய்வதற்கு காவல்துறையினருக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கின்றது.
மேலும், பிரிஸ்பேன் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜி20 மாநாட்டு அதிகாரத்துவ சின்னத்தின் முன்னால் நின்று பத்திரிக்கையாளர்களுக்கு காட்சி கொடுக்கும் நரேந்திர மோடி
மாநாட்டின்போது ஜெர்மன் அதிபர் மெர்கலுடன் தீவிரமான உரையாடலில் ஈடுபட்டிருக்கும் மோடி….
படங்கள்: EPA