Home நாடு சிலாங்கூர் சுல்தானுக்குரிய பாராட்டையும், நற்பெயரையும் அஸ்மின் பறிக்கக்கூடாது

சிலாங்கூர் சுல்தானுக்குரிய பாராட்டையும், நற்பெயரையும் அஸ்மின் பறிக்கக்கூடாது

623
0
SHARE
Ad
Azmin Ali

கோலாலம்பூர், நவம்பர் 18 – பறிமுதல் செய்யப்பட்ட பைபிள்கள் மலேசிய பைபிள் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது தொடர்பில் கிடைத்துள்ள பாராட்டும் நற்பெயரும் சிலாங்கூர் சுல்தானயே முழுமையாகச் சென்றடைய வேண்டும் என மசீசதெரிவித்துள்ளது.

சிலாங்கூர் சுல்தானுக்கு கிடைக்க வேண்டிய நற்பெயரை மாநில மந்திரி பெசார் அஸ்மின் அலிஅபகரிக்கக்கூடாது என சிலாங்கூர் மசீச செயலாளர் நக் சோக் சின் (Ng Chok Sin) தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“சுல்தான் செய்துள்ள நல்ல காரியங்களுக்கான பலன்களை அஸ்மின் அலி கடத்த முயற்சிக்கக்கூடாது. அவர் மந்திரி பெசாராக பதவி ஏற்கும் முன்பே பைபிள் விவகாரம் தொடர்பில் சிலாங்கூர் அரண்மனை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. சிலாங்கூர் சுல்தானின் இந்த முயற்சிகளை அஸ்மின் அலி வெளிப்படையாக ஒப்புக்கொண்டு அங்கீகரிக்க வேண்டும்” என்றும் சோக் சின் மேலும் கூறியுள்ளார்.

பைபிள் விவகாரம் சுமுகமாக முடிவுக்கு வந்திருப்பதாகவும் இத்தகைய முடிவு எடுப்பதற்கு தைரியம் தேவை என்றும் அஸ்மின் அலி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதையடுத்து இணையத் தளத்தில் அவரைப் பாராட்டி பல்வேறு கருத்துக்கள் வெளியாகின. தனக்கு முன்பு மந்திரி பெசாராக இருந்த டான்ஸ்ரீ காலிட் 9 மாதங்களாக தீர்க்காமல் இருந்த பிரச்சினையை அஸ்மின் அலி ஒரே மாதத்தில் முடிவுக்கு கொண்டு வந்ததாக பலரும் பாராட்டினர்.sultan selangor

“ஆனால் பைபிள் விவகாரத்தில் அஸ்மின் அலிக்கு எந்தவித பங்களிப்பும் இல்லை என அரண்மனை வட்டாரங்கள் தெளிவுபடுத்தி உள்ளன. பைபிள் விவகாரம் குறித்து ஊடகங்களிடம் பேசியது மட்டுமே அவர் செய்தது. பைபிள் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அறிவு பூர்வமாக முடிவெடுத்தது சிலாங்கூர் சுல்தான் தான் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது,” என்று நக் சோக் சின் கூறியுள்ளார்.

மந்திரி பெசார் என்ற வகையில் அஸ்மின் அலி நியாயமாகவும், வெளிப்படையாகவும் செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், பொது மக்களை அவர் தவறாக வழிநடத்திச் செல்லக்கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

“அஸ்மின் அலி விடுத்த அறிக்கையை கண்டவர்கள் அவர் குறிப்பிட்டிருந்த கடினமான முடிவை எடுத்தது அவர்தான் என்று கருதிவிட்டனர். ஆனால் பைபிள் விவகாரத்தில் பக்காத்தான் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை. இந்த விவகாரத்தில் ஐசெக கடைசி வரை மௌனம் காத்துவிட்டது,” என்று நக் சோக் சென் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.