Home நாடு நாடு திரும்பும் ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவர்

நாடு திரும்பும் ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவர்

547
0
SHARE
Ad

Datuk-Dr-Wan-Junaidi-Tuanku-Jaafarகோலாலம்பூர், நவம்பர் 18 –  ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கொள்கைகளை பரப்பும் நோக்கத்துடன் நாடு திரும்பவுள்ள மலேசியர்கள் கண்காணிக்கப்படுவர் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

“அவர்கள் அதிகாரிகளிடம் சரணடைவதற்காக நாடு திரும்பவில்லை. மாறாக தாங்கள்
ஏற்றுக்கொண்ட கொள்கைகளை மற்றவர்களிடம் பரப்புவதே அவர்களின் நோக்கம்.
இதுகுறித்து நன்கு அறிந்திருக்கிறோம்,” என்று உள்துறை துணை அமைச்சர்
டத்தோ வான் ஜுனைடி வான் ஜஃபார் (படம்) கூறியுள்ளார்.

காவல்துறை, நாடு திரும்பும் அந்த மலேசியர்களின் நோக்கம் குறித்து  அறிந்திருப்பதாக குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக காவல் துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்வர் என்றார்.

#TamilSchoolmychoice

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும்போதே, டத்தோ  வான் ஜுனைடி இவ்வாறு கூறினார்.

முன்னதாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் 39 மலேசியர்கள் இணைந்திருப்பது
கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பாக மேற்கொண்டு விவரங்கள் எதையும்
தெரிவிக்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இந்த 39 பேரில் சபா அல்லது சரவாக்கைச் சேர்ந்த யாரும் இல்லை. இதை
மட்டும் உறுதியாக கூற முடியும்,” என்று மற்றொரு கேள்விக்கு பதில்
அளிக்கையில் வான் ஜுனைடி தெரிவித்தார்.