சென்னை, நவம்பர் 18 – தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவின் முன்னணி நடிகராகிவிட்டார் தனுஷ். இவர் பாடகர், பாடலாசிரியர் என்று பல திறமைகளை திரைத்துறையில் நிருபித்துகாட்டியவர்.
இதை எல்லாம் விட தனுஷ் நல்ல தயாரிப்பாளரும் கூட. இவரது தயாரிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனால், இவரது தயாரிப்பில் வெளிவராமல் இருக்கும் ‘காக்கா முட்டை’ படம் வெளியாகும் முன்பே பல விருது விழாவில் கலந்து கொண்டு கலக்கி வருகிறது.
#TamilSchoolmychoice
இந்நிலையில் தற்போது துபாய் ‘அனைத்துலக விருது’ விழாவில் அடுத்த மாதம் தனுஷ் தயாரிப்பில் வெளிவராமல் இருக்கும் ‘காக்கா முட்டை’ படம் கலந்து கொள்ள இருக்கிறது.