“ஆண்டுதோறும் மதுக்கடை வருமானம் உயர்ந்து வருவதைப்போல குடிபோதையினால் ஏற்படும் விபத்துக்களும் உயர்ந்துவருகின்றன. 2003–ம் ஆண்டில் குடிபோதை விபத்துகளின் எண்ணிக்கை 9,275 ஆக இருந்தது”.
“ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது 2013–ம் ஆண்டு இது 17,000 ஆக உயர்ந்துவிட்டது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கும் மது பழக்கம்தான் முதன்மையான காரணமாக காவல்துறையால் சொல்லப்படுகிறது”.
“எனவே தமிழ் சமுதாயத்தை பாதுகாக்கவும், மரபுவழி பண்பாட்டுப் பெட்டகமான தமிழகத்தை சீரழிவுகளிலிருந்து மீட்கவும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் டிசம்பர் 4–ம் தேதி அனைத்து மாவட்டத்தின் தலைநகரங்களிலும் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வைகோ கூறினார்.