Home 13வது பொதுத் தேர்தல் பி.பி.பி வேட்பாளர்களில் பெரும்பாலோர் புதுமுகங்கள்

பி.பி.பி வேட்பாளர்களில் பெரும்பாலோர் புதுமுகங்கள்

758
0
SHARE
Ad

pppகோலாலம்பூர், பிப்.26- வேட்பாளர்  பட்டியலைப் பிரதமரிடம் சமர்ப்பித்துவிட்டோம். இந்தப் பட்டியலில் பெரும்பாலோர் புதுமுகங்கள் என்று பிபிபி கட்சி உதவித் தலைவர் டத்தோ மெக்லின் டிகுருஸ் தேரிவித்தார்.

நாட்டின் 13 வது பொது தேர்தல்  எந்த நேரத்திலும் நிகழலாம். அவ்வகையில் வேட்பாளர்கள் பட்டியலைச் சமர்ப்பித்துள்ளோம். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை இப்போது வெளியிட இயலாது என்று அவர் மேலும் கூறினார்.

எங்கள் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றிபெறக்கூடிய ஆற்றல்மிக்கவர்கள். எனினும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் இறுதி முடிவு பிரதமரின் கையில் உள்ளது.

#TamilSchoolmychoice

நேற்று முன் தினம் ஜின் ஜாங் செலாத்தான் குடியிருப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்த ஒரே மலேசியா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது மெக்லின் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 2008 மார்ச் 8 ஆம் தேதி நடைபெற்ற பொது தேர்தலின்போது பேராவில் உள்ள தைப்பிங் நாடாளுமன்றத் தொகுதியிலும் பாசிர் பெடாமர் சட்டமன்றத் தொகுதியிலும்  பி.பி.பி போட்டியிட்டது. ஆனால், இரண்டு தொகுதிகளிலும்  தோல்வியே கண்டது.

மலேசியா கினி