Home உலகம் இலங்கையில் ஜனவரி 8-ம் தேதி அதிபர் தேர்தல்! ராஜபக்சே 3வது முறையாகப் போட்டி!

இலங்கையில் ஜனவரி 8-ம் தேதி அதிபர் தேர்தல்! ராஜபக்சே 3வது முறையாகப் போட்டி!

412
0
SHARE
Ad

Rajapakse-Sliderகொழும்பு, நவம்பர் 22 – இலங்கை அதிபர் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 8-ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்சே 2005 மற்றும் 2010-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று இரண்டு முறை இலங்கை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் அவர், 3-வது முறையாக அதிபர் தேர்தலில்  போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார்.

அந்நாட்டு தேர்தல் ஆணையம் நேற்று அதிபர் பதவிக்கான தேர்தல் வரும் ஜனவரி மாதம்     8-ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

விடுதலைப் புலிகளுடனான போரில் ராஜபக்சே அரசு வெற்றி அடைந்ததன் மூலம், அவரின் செல்வாக்கு கடந்த  2010-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிகரித்து இருந்தது. எனினும், தற்சமயம் பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட துறைகளில் அவரின் குடும்ப வாரிசுகள் காலூன்ற தொடங்கி உள்ளதால், அவரின் வாக்கு வங்கிகள் சரிவை சந்தித்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

மேலும், அவர் ஆட்சியில் தான் அதிபரிடமே ஏராளமான அதிகாரம் இருக்கும் வகையில் அரசியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இதனை மக்கள் விரும்பவில்லை. எனினும் ராஜபக்சேவிற்கு எதிராக போட்டியிட்டு வெற்றிபெறுவதற்கு அங்கு பலமான எதிர்கட்சிகள் உருவாகவில்லை. அதனால் இம்முறையும் ராஜபக்சேவிற்கு வெற்றி சாத்தியமாகலாம் என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.