Home வணிகம்/தொழில் நுட்பம் விளம்பரங்கள் இல்லா இணையச் சேவை – கூகுள் புதிய முயற்சி!

விளம்பரங்கள் இல்லா இணையச் சேவை – கூகுள் புதிய முயற்சி!

551
0
SHARE
Ad

Google_AP_2177044fகோலாலம்பூர், நவம்பர் 24 – கூகுள்  நிறுவனம், பயனர்கள் பார்வையிடும் இணையத் தளங்களுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கூகுள் தேடுபொறி (Browser) வழியாக இணைய தளங்களைப் பார்வையிடுவதற்கு கூகுள் நிறுவனம் பயனர்களிடமிருந்து கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. மாறாக ஒவ்வொரு இணையத் தளங்களிலும் பல்வேறு நிறுவனங்களுக்கான விளம்பரங்களை இடம்பெறச் செய்து அந்த நிறுவனங்கள் மூலமாகத் தேவையான வருவாயை ஈட்டி வருகின்றது. இந்நிலையில் கூகுள், விரைவில் விளம்பரங்கள் இல்லா இணையச் சேவையை முயன்று பார்க்க முடிவு செய்துள்ளது.

தற்சமயம் பயனர்கள் குறிப்பிட்ட சில தளங்களில் மட்டும் கட்டணம் செலுத்தி பயன்படுத்தத் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் மற்ற நிறுவனங்களின் எந்தவொரு விளம்பரமும் இடம்பெறாது. மாறாக அந்த தளங்களைப் பார்வையிட 1 முதல் 3 டாலர்கள் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூகுள் வட்டாரங்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

கூகுள் இந்த புதிய முறை தொடர்பாக பல்வேறு நிறுவனங்களுடன் பேசி வருவதாகக் கூறப்படுகின்றது. ‘சைன்ஸ் டெய்லி’ (Science Daily), ‘அர்பன் டிக்ஸ்னரி’ (Urban Dictionary) போன்ற தளங்கள் கூகுளின் இந்த புதிய திட்டத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்த தளங்களை பயனர்கள் விளம்பரங்கள் இன்றிப் பார்வையிட, தேவையான கட்டணம் செலுத்தி பின்னர் தங்கள் ஜிமெயில் கணக்கு மூலமாக தளங்களை பார்வையிட முடியும்.

இணையதளங்களில் விளம்பரங்களால் இடையூறு ஏற்பட்டாலும், தளங்களை கட்டணம் செலுத்திப் பயன்படுத்த எத்தனை பயனர்கள் தயாராக உள்ளனர் என்பது கேள்விக் குறி தான்.