கோலாலம்பூர், நவம்பர் 24 – ஒரே மலேசியா வீடமைப்புத் திட்டத்தின் கீழ் வீடு வாங்க விரும்புவோருக்கு சுமார் 110 விழுக்காடு வரை வீட்டு கடன் வசதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்துள்ளார்.
அத்துடன் வழங்கப்படும் இந்த 110 விழுக்காடு வீட்டு கடன் வசதியின் வழி, வீட்டை வாங்குவதற்கும் இதர செலவினங்களுக்குமான சட்ட கட்டணங்கள் உட்பட வீட்டு காப்புறுதிக்கான பயன்பாட்டுக்கும் இத்தொகை வகை செய்துள்ளது.
வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடி போக நினைக்கு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மலேசியர்களுக்கு இந்த கடன் வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பிரதமர் நஜிப் தனது அகப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 5 ஆண்டுகளில் தேசிய அளவில் சுமார் 5 லட்சம் வீடுகளை ஒரே மலேசியா திட்டத்தின் கீழ் கட்டுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாகவும் நஜிப் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் குறித்த முழு விபரங்களை www.pr1ma.my என்ற அகப்பக்கத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.