Home நாடு கேமரன் மலையில் ராணுவம், காவல் துறை சுற்றுக்காவல் நடவடிக்கை – நஜிப் அறிவிப்பு

கேமரன் மலையில் ராணுவம், காவல் துறை சுற்றுக்காவல் நடவடிக்கை – நஜிப் அறிவிப்பு

545
0
SHARE
Ad

செர்டாங், நவம்பர்  24 – கேமரன் மலைப் பகுதிக்கு ராணுவத்தினரும், கூடுதல் காவல் துறையினரும் அனுப்பி வைக்கப்படுவர் என்றும், இந்நடவடிக்கையின் மூலம் அங்கு காடுகள் சட்டவிரோதமாக அழிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படும் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

மேலும் கள்ளக்குடியேறிகளைக் களையெடுக்கும் பணியும் முடுக்கிவிடப்படும் என அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பகாங் சுல்தான் அகமட் ஷாவுடன் தாம் கலந்தாலோசனை நடத்தியதாகக் குறிப்பிட்ட பிரதமர் நஜிப், இரவு நேரங்களில்தான் கேமரன் மலையில் காடுகள் அழிக்கப்படுவதாக சுல்தான் தம்மிடம் தெரிவித்ததாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

“எனவே இரவு நேரங்களில் காவல்துறையும், ராணுவமும் இணைந்து சோதனை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என சுல்தான் கேட்டுக் கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து காவல்துறை தலைவர் மற்றும் ராணுவத் தளபதிக்கு இரவு நேர சுற்றுக்காவல் (ரோந்து) மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்,” என்று பிரதமர் நஜிப் தெரிவித்துள்ளார்.

கேமரன் மலையில் உள்ள கள்ளக்குடியேறிகளை களையெடுக்கும் வேண்டும் என கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சுல்தான் அகமட் ஷா, வலியுறுத்தி இருந்தார். இதையடுத்து அதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

பகாங் மாநில அரசாங்கத்துடன் மத்திய அரசும் இணைந்து செயல்பட்டு கள்ளக்குடியேறிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் நஜிப்.