Home நாடு சிலாங்கூர்: எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மானியங்கள் ஒதுக்கீடு

சிலாங்கூர்: எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மானியங்கள் ஒதுக்கீடு

532
0
SHARE
Ad

கோலாலம்பூர், நவம்பர் 25 – முதன்முறையாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதிப் பணிகளை கவனிக்க சிறப்பு மானியங்களை வழங்குகிறது சிலாங்கூர் மாநில அரசு. இம்மாநிலத்தில் உள்ள 12 எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதி மேம்பாடு மானியமாக 2 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட, 2015ஆம் ஆண்டுக்கான வரவு
செலவு அறிக்கையில் மாநில மந்திரி பெசார் அஸ்மின் அலி பரிந்துரைத்துள்ளார்.

Azmin Aliபொது மக்களுக்கான உள்ளூர் பிரதிநிதிகளின் சேவையை மேம்படுத்தும் விதமாக
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மக்கள் நட்புறவு திட்டத்தின் கீழ் (மெஸ்ரா ராயாட்) இந்த மானிய ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சிலாங்கூரைப் போலவே பினாங்கு மாநிலத்திலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு தங்கள் தொகுதியில் சிறிய அளவிலான வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள தலா 40 ஆயிரம் வெள்ளி வழங்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
அஸ்மின் அலி, மானிய ஒதுக்கீடு காரணமாக மாநில அரசுக்கு ஆண்டுதோறும்
2.4 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என்று தெரிவித்தார்.

“சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டுக்கு சிலாங்கூர் மற்றும் பினாங்கு அரசாங்கங்கள் உரிய மதிப்பளிக்கிறது எனும் தகவலை இதன் மூலம் மத்திய அரசு தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கும் என நம்புகிறேன். இதேபோல் அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளுக்கு மத்திய அரசும் மதிப்பளிக்க வேண்டும்,” என்று அஸ்மின் அலி வலியுறுத்தினார்.