Home தொழில் நுட்பம் 2015-ல் தகவல் திருடர்களின் இலக்கு திறன்பேசிகள் – சைமன்டெக் அறிக்கை!

2015-ல் தகவல் திருடர்களின் இலக்கு திறன்பேசிகள் – சைமன்டெக் அறிக்கை!

613
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 4 – 2015-ம் ஆண்டில் தகவல் திருடர்களின் முக்கிய இலக்கு திறன்பேசிகளாக இருக்கும் என்று ஆய்வு நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன.

சுமார் 10 முதல் 15 வருடங்களாக, உலகம் இணையம் சார்ந்து இயங்கி வந்தாலும், கடந்த சில வருடங்களில் இணையத்தின் அசுர வளர்ச்சி உச்சத்தை எட்டியுள்ளது. அதற்கு முக்கியக் காரணம் திறன்பேசிகள்.

mobile-phones

#TamilSchoolmychoice

 

தொடக்க காலங்களில் பொழுதுபோக்கிற்காகவும், இணையப் பயன்பாடுகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்த திறன்பேசிகள் நாளடைவில் வர்த்தகம், தகவல் பரிமாற்றம் மற்றும் அலுவலகக் காராணங்களுக்காகவும் பயன்படத் தொடங்கின.

இந்த நிலையில் தகவல் திருட்டு பற்றி ஆய்வு செய்த முன்னணி தகவல் பாதுகாப்பு நிறுவனமான சைமன்டெக், சமீபத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில், “2015-ம் ஆண்டில், ஆசியா-பசிபிக் மற்றும் ஜப்பான் நாடுகளில் திறன்பேசிகளைச் சார்ந்து வீட்டின்  செயல்பாடுகள் நடைபெறும். வீட்டின் மின்சாதனப் பொருட்களின் இயக்கம் முதல் அனைத்து செயல்பாடுகளையும் திறன்பேசிகள் மூலம் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது.”

“தொழில்நுட்பம் சார்ந்த முன்னேற்றமாக இது கருதப்பட்டாலும், தகவல் திருட்டுக்கள் முன்பை விட அதிகரிக்க இது வழிவகுக்கும்”

“2015-ல் கிளவுட் தொழில்நுட்பம் மூலமாக தகவல்கள் சேமிப்பு அதிகம் நடைபெற உள்ளது. அதன் காரணமாக பயனர்களின் தனித்த தகவல்கள் மற்றும் தரவுகளை அதிகபட்ச பாதுகாப்புடன் கண்காணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது”

“தகவல் திருடர்களின் இணைய வெளி (சைபர்) தாக்குதல்களை தனித்த ஒரு பாதுகாப்பு நிறுவனத்தால் மட்டும் கட்டுப்படுத்த இயலாது. அதனால் வரும் காலத்தில் தனியார் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றிணைந்தே தகவல் திருட்டை தடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.