Home இந்தியா கேரளாவில் பறவைக் காய்ச்சல்: 4 லட்சம் வாத்து, கோழிகள் தீ வைத்து அழிப்பு!

கேரளாவில் பறவைக் காய்ச்சல்: 4 லட்சம் வாத்து, கோழிகள் தீ வைத்து அழிப்பு!

740
0
SHARE
Ad

poulty-farming-in-Namakkalதிருவனந்தபுரம், நவம்பர் 28 – கேரளாவில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கிய 4 லட்சம் வாத்து மற்றும் கோழிகளை தீ வைத்து அழிக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கேரள மாநிலம் ஆலப்புழாவில் பறவை காய்ச்சல் பரவியதால் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. மத்திய குழுவினரும் ஆலப்புழாவில் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பத்தனம்திட்டா மாவட்டத்திலும் பறவை காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆலப்புழா, பத்தனம்திட்டா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பீதியால் லட்சக்கணக்கில் வாத்துகளை கொன்று புதைத்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

பறவை காய்ச்சல் பீதி நிலவும் ஆலப்புழாவில் பல ஆயிரம் வாத்துகள் கொல்லப்பட்டு வரும் நிலையில், அந்த மாவட்டத்தில் இருந்து கேரளாவின் மற்ற பகுதிகளுக்கு வாத்து மற்றும் இறைச்சி கோழிகள் விற்பனைக்கு கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு வாத்து மற்றும் இறைச்சி கோழிகளை கொண்டு செல்ல 2 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.