Home நாடு உடல்நலக் குறைவையும் மீறி அம்னோ மாநாட்டில் பங்கேற்ற மகாதீர்!

உடல்நலக் குறைவையும் மீறி அம்னோ மாநாட்டில் பங்கேற்ற மகாதீர்!

603
0
SHARE
Ad

Dr Mahathirகோலாலம்பூர், நவம்பர் 30 -உடல்நலக்குறைவையும் மீறி அம்னோ பொதுப் பேரவையில் கலந்து கொண்டுள்ளார் முன்னாள் பிரதமர் துன் மகாதீர். நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்ததும் அவர் அதனையும் மீறி ஆர்வமுடன் அம்னோ பொதுப் பேரவையில் கலந்து கொண்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

மாநாடு குறித்து அவரிடம் கருத்து கேட்க ஏராளமான ஊடகவியலாளர்கள் கூடியிருந்த நிலையில், யாருடைய கேள்விக்கும் பதில் அளிக்காமல் கிளம்பிச் சென்றார் மகாதீர்.

தன்னை எதிர்கொண்ட கேள்விகளுக்கு, “எனக்கு உடல் நலமில்லை,” என்பதை மட்டுமே பதிலாகத் தந்துவிட்டு சுறுசுறுப்பாக நடைபோட்ட அவரை, செய்தியாளர்கள் ஓட்டத்துடன் பின்தொடர வேண்டியிருந்தது.

#TamilSchoolmychoice

சிவப்பு கம்பளத்தில் நடந்து செல்லும்போது தனக்கு வாழ்த்து தெரிவிக்க காத்திருந்த பல பிரமுகர்களிடம் கைகுலுக்கி நலம் விசாரித்தார் மகாதீர். மேலும் தனது பள்ளிக்கால நண்பர் டான்ஸ்ரீ  ஹனிஃபா ஹுசேன் உடல்நலக் குறைவு காரணமாக தன் முகத்தில் முகத்திரை (மாஸ்க்) அணிந்திருப்பதைக் கண்டதும், “இவர் யார்… எனக்கு இவரைத் தெரியாதே?” என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

மாநாட்டில் பிரதமர் நஜிப் ஆற்றிய கொள்கை உரை குறித்த கேள்விக்கு, “அது உறுதித்தன்மையுடன் தொடர்புடையது,” என்றார் மகாதீர்.

நஜிப்புக்கான தமது ஆதரவை விலக்கிக் கொள்வதாக அவர் அண்மையில் அறிவித்திருந்ததால், மாநாடு குறித்த அவரது கருத்தை அறிய செய்தியாளர்கள் முண்டியடித்தனர். அவர்களால் மகாதீர் தடுமாறி விழாமல் பாதுகாக்க, பாதுகாவலர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

நஜிப்பின் தலைமைத்துவம் மீது தொடர்ந்து குறை கூறி வரும் மகாதீர், அப்படி இருந்தும் துணிச்சலுடன் அம்னோ மாநாட்டில் கலந்து கொண்டிருக்கின்றார்