Home தொழில் நுட்பம் டுவிட்டர் உங்களின் திறன்பேசிகளைக் கண்காணிக்கிறது!

டுவிட்டர் உங்களின் திறன்பேசிகளைக் கண்காணிக்கிறது!

692
0
SHARE
Ad

Twitter-440-x-215கோலாலம்பூர், நவம்பர் 30 – ‘டுவிட்டர்’ (Twitter) நிறுவனம், பயனர்களின் திறன்பேசிகளை தனிப்பட்ட முறையில் கண்காணிக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல் சமீபத்தில் வெளியாகி உள்ளது.

டுவிட்டர் இது பற்றி முறையான விளக்கங்களைக் கொடுத்திருந்தாலும், நட்பு ஊடகங்கள் தொடர்ந்து பயனர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டுவிட்டர், உலக அளவில் தகவல் பரிமாற்றத்திற்கான இடைவெளியை வெகுவாக குறைத்த மற்றுமொரு நட்பு ஊடகம்.

பிரபலங்களையும், நட்சத்திரங்களையும் தொலைவில் இருந்து மட்டுமே கண்டு ரசித்த ரசிகனுக்கு, அவர்களுடன் ஊடகம் மூலம் அளவளாவுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்ததால், டுவிட்டர், பயனர்கள் மத்தியில் தற்சமயம் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், பயனர்களின் திறன்பேசிகளை தனிப்பட்ட முறையில் கண்காணிப்பதாக டுவிட்டர் நிறுவனம் சமீபத்தில் அறிவித்து இருந்தது. அதாவது பயனர்கள் எந்தவகையான செயலிகளை தினமும் பயன்படுத்துகின்றனர்.

பல்வேறு தளங்களில் இருந்து அவர்கள் எத்தகைய செயலிகளை பதிவிறக்கம் செய்கின்றனர் என்பது போன்ற தகவல்களை அந்நிறுவனம் சேகரித்து வருவதாகத் தெரிவித்து இருந்தது.

இது குறித்து டுவிட்டர் நிறுவனம் கூறுகையில்,”பயனர்களுக்கு மேலும் தனித்த அனுபவத்தை  கொடுப்பதற்காக, நாங்கள் இத்தகைய சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றோம்.

பயனர்களின் செயலிகள் மூலமாக, பெரும்பான்மையான பயனர்களின் ரசிப்புத்தன்மை எந்த தளத்தில் உள்ளது என்பதை எங்களால் கவனிக்க முடியும். இதன் மூலம் டுவிட்டரில் பயனர்களுக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்த முடியும்” என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

டுவிட்டரின் இத்தகைய செயல்கள் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தாது என்ற போதிலும், பேஸ்புக், டுவிட்டர் போன்ற நட்பு ஊடகங்கள் தங்கள் வர்த்தகத்தை பெருக்குவதற்காக தொடர்ந்த பயனர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன என்பது இங்கு பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.