Home உலகம் தொடர்ந்து ஏற்றம் காண்கிறது சிங்கப்பூரியர்களின் வருமானம்

தொடர்ந்து ஏற்றம் காண்கிறது சிங்கப்பூரியர்களின் வருமானம்

466
0
SHARE
Ad

சிங்கப்பூர், டிசம்பர் 3 – முழு நேர பணி புரியும் சிங்கப்பூர்வாசிகளின் சராசரி வருமானம் சுமார் 3770 சிங்கப்பூர் டாலர்களாக தற்போது ஏற்றம் கண்டுள்ளது. இது கடந்த 2013, ஜூன் மாதம் இருந்த அளவைக் காட்டிலும் 1.8 விழுக்காடு அதிகமாகும்.

singapore2_1

கடந்த 5 ஆண்டுகளாகவே சிங்கப்பூரர்களின் வருமானம் சீராக உயர்ந்து வருகிறது. குறிப்பாக குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள், நடுத்தர வருமானம் ஈட்டுபவர்களை எட்டிப்பிடித்து வருகிறார்கள்.

#TamilSchoolmychoice

‘சிங்கப்பூர் பணி ஆற்றல் 2014’ என்ற பெயரில் அந்நாட்டின் மனித ஆற்றல் துறையின் ஆய்வு மற்றும் புள்ளி விவரத் துறை நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.

இந்நிலையில் நடுத்தர வருமானம் பெறும் மலேசியர்களின் சராசரி மாதாந்திர வருமானம் 3626 ரிங்கிட் என கஸானா ஆய்வு மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

இதற்கிடையே சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு நிலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அங்கு பெண்களும் மூத்த குடிமக்களும் கூட பணியாற்றும் நிலையில், வேலை வாய்ப்யின்மை விகிதம் குறைவாக உள்ளது.

25 முதல் 54 வயதுக்குட்பட்ட பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 74.3 விழுக்காடாக இருந்த நிலையில், அது தற்போது 76 விழுக்காடு என்ற சாதனை அளவை எட்டிப் பிடித்துள்ளது.

54 முதல் 64 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்களுக்கான வேலை வாய்ப்பு விகிதமானது 66.3% (2013) என்பதில் இருந்து 65 விழுக்காடாக ஏற்றம் கண்டுள்ளது.