கோலாலம்பூர், டிசம்பர் 3 – கோலாலம்பூர்-இலண்டன் நகரங்களுக்கு இடையே ஏர் ஏசியா எக்ஸ்-ன் விமான போக்குவரத்து மீண்டும் ஏற்படுத்தப்படும் என அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக ஏர் ஏசியா எக்ஸ்-ன் தலைமை நிர்வாக அதிகாரி டோனி பெர்னாண்டஸ் டுவிட்டர் பதிவின் மூலம் தெரிவித்துள்ளதாவது:- “பயணிகளுக்கு இடையே மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தும், கோலாலம்பூர்-இலண்டன் நகரங்களுக்கு இடையே ஏர் ஏசியா எக்ஸ்-ன் விமான போக்குவரத்து மீண்டும் ஏற்படுத்தப்படும். இதற்கான ஆயத்த நடவடிக்கைகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.”
“இரு நகரங்களுக்கு இடையேயான விமான போக்குவரத்தினை மீண்டும் தொடங்குவது தொடர்பாக இலண்டன் மேயர் போரிஸ் ஜான்சன்னுடன் விவாதிக்க உள்ளேன். வெகு விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம். கோலாலம்பூர் மற்றும் இலண்டன் இடையே மீண்டும் விமான போக்குவரத்து ஏற்படும் தருணத்தில் பயணிகளில் ஒருவருக்கு இலவச பயணச்சீட்டு வழங்கப்படலாம்” என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு முதல் கோலாலம்பூர்-இலண்டன் நகரங்களுக்கு இடையே ஏர் ஏசியா எக்ஸ்-ன் விமான சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.