Home நாடு பெட்ரோல் விலை குறைந்தது – டீசல் விலை அதிகரிப்பு!

பெட்ரோல் விலை குறைந்தது – டீசல் விலை அதிகரிப்பு!

450
0
SHARE
Ad

Petrol Pumpsகோலாலம்பூர், டிசம்பர் 1 – டிசம்பருக்கான எண்ணெய் விலை நிர்ணயத்தில் ரோன் 95 மற்றும் ரோன் 97 ஆகியவற்றின் விலை தலா 4 காசு மற்றும் 9 காசும் குறைந்தது.

அதன் படி, புதிய விலை ரோன் 95 லிட்டருக்கு 2.26 ரிங்கிட்டும், ரோன் 97 லிட்டருக்கு 2.46 ரிங்கிட்டும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதே வேளையில், டீசல் விலை 3 காசு உயர்ந்து லிட்டருக்கு 2.23 ரிங்கிட்டாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு டீசல் விலை லிட்டருக்கு 2.20 காசாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இந்த அறிவிப்பை உள்நாட்டு வர்த்தக கூட்டுறவு பயனீட்டாளர் நலத்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.