Home வணிகம்/தொழில் நுட்பம் கச்சா எண்ணெய்யின் வீழ்ச்சி, உலகப் பொருளாதாரத்தின் எழுச்சி: ஐஎம்எப்!

கச்சா எண்ணெய்யின் வீழ்ச்சி, உலகப் பொருளாதாரத்தின் எழுச்சி: ஐஎம்எப்!

623
0
SHARE
Ad

IMF_Logoவாஷிங்டன், டிசம்பர் 4 – கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி உலகப் பொருளாதாரத்திற்கு நன்மை விளைவிக்கும் என அனைத்துலக நாணய நிதியத்தின் மேலாண்மை இயக்குனர் கிறிஸ்டியன் லகார்டே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கிறிஸ்டியன் லகார்டே கூறுகையில், “கச்சா எண்ணெய் விலை கடந்த ஜூன் மாதம் தொடங்கி தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது.

இந்த வீழ்ச்சி கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளர்களை வெகுவாக பாதித்தாலும், பல நாடுகளுக்கு பொருளாதார முன்னேற்றத்தையே கொடுத்துள்ளன”.

#TamilSchoolmychoice

“இதன் காரணமாக, உலகப் பொருளாதாரமும் தொடர் முன்னேற்றத்தை கண்கொண்டு வருகின்றது. அனைத்து விவகாரங்களிலும் வெற்றி, தோல்வி என்பது இயற்கை. இந்த விவகாரத்தில் பெரும்பான்மையானவர்களுக்கு வெற்றியே” என்று அவர் கூறியுள்ளார்.

நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் விலை ஏற்றத்தையும் நிர்ணயிக்கும் சில முக்கிய காரணிகளுள் கச்சா எண்ணெய்க்கு மிக முக்கிய பங்கு உண்டு. கச்சா எண்ணெய் விலையின் வீழ்ச்சி, கடந்த ஜூன் மாதம் தொடங்கி தற்பொழுது சுமார் 30 சதவீதத்தை தாண்டியுள்ளது.

அதே சமயத்தில், உலக அளவில் கச்சா எண்ணெய்யின் தேவைகளும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளன. கடந்த அக்டோபர் மாதம் அனைத்துலக நாணய நிதியம் உலக நாடுகளின் எதிர்கால பொருளாதார வளர்ச்சி பற்றிய கணிப்பினை வெளியிட்டு இருந்தது.

அதில், ஐரோப்பா, ஜப்பான் போன்ற பெரும்பான்மையான நாடுகள் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தன.

இந்நிலையில், கச்சா எண்ணெய் தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருவதால், உலகப் பொருளாதாரத்தில் 0.8 சதவீத வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐஎம்எப் அமைப்பு கூறியுள்ளது.

அமெரிக்கா, சீனா, ஜப்பான், இங்கிலாந்து போன்ற நாடுகள் கச்சா எண்ணெய்யை இறக்குமதி மட்டும் செய்து வருவதால், அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சி நிச்சையம் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.