Home கலை உலகம் ‘விக்டோரியா சீக்ரெட் ஃபேஷன்’ ஆடை அலங்காரம் – கண்கவர் படக் காட்சிகள் (தொகுப்பு 1)

‘விக்டோரியா சீக்ரெட் ஃபேஷன்’ ஆடை அலங்காரம் – கண்கவர் படக் காட்சிகள் (தொகுப்பு 1)

943
0
SHARE
Ad

epa04512404 French model Cindy Bruna (L), Brazilian model Barbara Fialho (3-L), Polish model Magdalena Frackowiak (2-R) and other models take to the catwalk during the 2014 Victoria's Secret Fashion Show at the Earls Court Exhibition Centre in London, Britain, 02 December 2014.  EPA/FACUNDO ARRIZABALAGA ATTENTION EDITORS: PUBLICATION EMBARGOED UNTIL 2200 GMT, 02 DECEMBER 2014இலண்டன், டிசம்பர் 5 – “விக்டோரியா சீக்ரெட் ஃபேஷன்” என்பது உலகப் புகழ் பெற்ற முக ஒப்பனை சாதனங்கள் மற்றும் நவீன ஆடை அலங்கார தயாரிப்பு நிறுவனமாகும். மலேசியாவிலும் குறிப்பிடத்தக்க பேரங்காடிகளில் இந்த நிறுவனம் தனது கண்காட்சி விற்பனை மையத்தை நடத்தி வருகின்றது.

இந்த நிறுவனம் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி  இலண்டனில், உலகின் முன்னணி அலங்காரப் பெண்களைக் கொண்டு (மாடல்கள்) ஆடை அலங்கார அணிவகுப்பு ஒன்றை நடத்தியது.

அந்தக் கண்காட்சியின் கண்கவர் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:-

#TamilSchoolmychoice

 Brazilian models Adriana Lima (L) and  Alessandra Ambrosio (R) take to the catwalk during the 2014 Victoria's Secret Fashion Show at the Earls Court Exhibition Centre in London, Britain, 02 December 2014.  EPA/FACUNDO ARRIZABALAGA

கவர்ச்சி, வித்தியாச வண்ணங்கள், அழகுப் பெண்கள் என அனைத்து அம்சங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்த இந்த அணி வகுப்பில் இங்கே காட்சி தருவது பிரேசில் நாட்டு அழகிகள் அட்ரியானா லீமா (இடது) மற்றும் அலெஸ்சாண்ட்ரா அம்ப்ரோசியோ (வலது)  (Adriana Lima (L) and Alessandra Ambrosio (R).

Puerto Rican model Joan Smalls takes to the catwalk during the 2014 Victoria's Secret fashion show at the Exhibition Centre in Earls Court in central London, Britain, 02 December 2014.  EPA/FACUNDO ARRIZABALAGA

அனைத்துலக ஆடை அலங்கார அணிவகுப்புகளில் தென் அமெரிக்க மற்றும் கறுப்பினப் பெண்களுக்கும் இப்போதெல்லாம் மிகுந்து முக்கியத்துவம் வழங்கப்படுகின்றன. அமெரிக்காவின் கறுப்பினப் பெண்களும் தற்போது விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் சக்தியைக் கொண்டுள்ளனர் என்பதும், தென் அமெரிக்காவின் வளர்ந்து வரும் பொருளாதாரமும் இதற்கான காரணங்களாகும்.

இங்கே காட்சி தருவது புவர்ட்டோ ரிக்கோ நாட்டின் மாடல் ஜோன் ஸ்மால்ஸ் (Joan Smalls).

Dutch model Doutzen Kroes takes to the catwalk during the 2014 Victoria's Secret Fashion Show at the Earls Court Exhibition Centre in London, Britain, 02 December 2014.  EPA/FACUNDO ARRIZABALAGA ATTENTION EDITORS: PUBLICATION EMBARGOED UNTIL 2200 GMT, 02 DECEMBER 2014இறக்கை கட்டியிருப்பதால், வானத்திலிருந்து வந்திறங்கிய தேவதையல்ல – இந்த பூமிக் கிரகத்தின் பெண்மணிதான்! நெதர்லாந்து நாட்டின் அழகி டோட்சன் குரோஸ் (Doutzen Kroes) தரும் அழகுத் தோற்றம்…..

 US model Devon Windsor takes to the catwalk during the 2014 Victoria's Secret Fashion Show at the Earls Court Exhibition Centre in London, Britain, 02 December 2014.  EPA/FACUNDO ARRIZABALAGA ATTENTION EDITORS: PUBLICATION EMBARGOED UNTIL 2200 GMT, 02 DECEMBER 2014

அலங்கார அணிவகுப்புகளில் அழகு மிளிர நடந்து காட்டுவதை ஏனோ தெரியவில்லை, ‘கேட் வாக்’ – பூனை நடை – என்கிறார்கள். அவ்வாறு இங்கே நடந்து காட்டுவது அமெரிக்க அலங்கார மாடல் அழகி டெவோன் வின்ட்சோர் (Devon Windsor)….

 Chinese model Sui He takes to the catwalk during the 2014 Victoria's Secret Fashion Show at the Earls Court Exhibition Centre in London, Britain, 02 December 2014.  EPA/FACUNDO ARRIZABALAGA

இன்றைக்கு முக அழகு ஒப்பனைகளிலும், உயர்தர பொருட்களின் விற்பனையிலும் சீனாவும் முன்னணி வகிக்கின்றது. இங்கே நாங்களும் வெள்ளைக்கார அழகிகளுக்கு சற்றும் சளைத்தவர்களல்ல என்பது போல் அழகுத் தோற்றம் காட்டுவது சீன அலங்கார அழகி சூய் ஹே (Sui He)…

 Swedish model Elsa Hosk takes to the catwalk during the 2014 Victoria's Secret Fashion Show at the Earls Court Exhibition Centre in London, Britain, 02 December 2014.  EPA/FACUNDO ARRIZABALAGA ATTENTION EDITORS: PUBLICATION EMBARGOED UNTIL 2200 GMT, 02 DECEMBER 2014

இதுபோன்ற ஆடை அணிகலன்கள் அணிவகுப்புகளுக்காக மட்டும்தானா அல்லது உண்மையிலேயே இதுபோன்று உடுத்திக் கொண்டு நிகழ்வுகளில் உலா வரமுடியுமா என நம்மை யோசிக்க வைக்கும் இந்த வித்தியாச ஆடை வடிவமைப்போடு காட்சி தருபவர் சுவீடன் நாட்டு அழகி எல்சா ஹோஸ்க் (Elsa Hosk)…

 Dutch model Maud Welzen takes to the catwalk during the 2014 Victoria's Secret Fashion Show at the Earls Court Exhibition Centre in London, Britain, 02 December 2014.  EPA/FACUNDO ARRIZABALAGAவண்ணமயமான இந்த காற்சட்டையோடு காட்சி தருபவர் நெதர்லாந்து நாட்டு அழகி மாவுட் வெல்சன் (Maud Welzen)

படங்கள்:EPA

நாளை – இலண்டன் விக்டோரியா சீக்ரெட்  ஃபேஷன் – தொகுப்பு 2