Home நாடு மாறுபட்ட போதனைகள் குறித்து எச்சரிக்கை தேவை – முஸ்லிம்களுக்கு சிலாங்கூர் சுல்தான் எச்சரிக்கை

மாறுபட்ட போதனைகள் குறித்து எச்சரிக்கை தேவை – முஸ்லிம்களுக்கு சிலாங்கூர் சுல்தான் எச்சரிக்கை

628
0
SHARE
Ad

Sultan-Selangor-Sultan-Sharafuddin-Idris-Shah1கோலசிலாங்கூர், டிசம்பர் 5 – சிலாங்கூர் மாநிலத்திலுள்ள இஸ்லாமியர்கள் மாறுபட்ட போதனைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அது நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கக்கூடும் என்றும் சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா தெரிவித்துள்ளார்.

அப்படி மாறுபட்ட போதனைகள் எதுவும் கூறப்பட்டு, அதை ஏற்றுக் கொள்வது சற்று கடினமாக இருக்கும் பட்சத்தில் உடனடியாகப் புகார் தெரிவிக்கலாம் என்றும் சுல்தான் கூறியுள்ளார்.

ஜெராமிலுள்ள சிம்பாங் அம்பாட்டில் மசூதி ஒன்றை துவங்கி வைத்த சுல்தான், மாறுபட்ட போதனைகள் இஸ்லாம் மக்களை குழப்பத்திற்கு உள்ளாக்கி அவர்களது நம்பிக்கையை குலைத்து, ஒற்றுமையின்மையையும், மோதலையும் ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இஸ்லாம் குறித்து போதனைகள் செய்பவர்கள் அதற்கு தகுதியுடன் இருக்கிறார்களா என்றும், வரையறைக்கு உட்பட்டு போதிக்கிறார்களா என்றும் ஜாயிஸ் உறுதி செய்ய வேண்டும் என்றும் சுல்தான் வலியுறுத்தியுள்ளார்.

மாறுபட்ட போதனைகள் எதுவும் மக்களிடையே கூறப்படுகின்றனவா என்பதையும் ஜாயிஸ் கவனிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.