Home வாழ் நலம் இதய நோய்க்கு சிறந்த மருந்தாகும் காலிஃப்ளவர்!

இதய நோய்க்கு சிறந்த மருந்தாகும் காலிஃப்ளவர்!

584
0
SHARE
Ad

????????????????????????????டிசமபர் 5 – காய்கறி இனத்தைச் சேர்ந்த காலிஃப்ளவர் காலிபிளவர் ஒருவகையான பூ வகையைச் சேர்ந்தது. இதில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் மூலிகையாகவும் கருதலாம். முட்டைக்கோஸும், காலிஃப்ளவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை.

இது சாதாரணமாக வெள்ளையாகவோ, இளம் மஞ்சளாகவோ காணப்படும். காலிஃப்ளவரில் பொட்டாசியம், விட்டமின் பி6 ஆகிய நார்ச்சத்துக்கள் உள்ளன. இதில் விட்டமின் சி மிக அதிகமாக உள்ளது.

ஒரு பூவில் கலோரி 24, புரதம் 2 கிராம், மாவுச்சத்து 5 கிராம், பொட்டாசியம் 355 மில்லி கிராம் அடங்கிய இந்தக் காய்கறியை அதிகமாக வேக வைக்க கூடாது. இல்லையெனில் சத்துக்கள் கரைந்துவிடும்.

#TamilSchoolmychoice

இதில் ஒரு வித தாவர அமிலம் உள்ளது. வேகும் போது கந்தகக் கலவையாக மாறி வாசனை வருகிறது. அதிக நேரம் வேக வைத்தால் வாசனை அதிகமாகும். சத்தும் வீணாகும். அலுமினியம், இரும்பு பாத்திரத்தில் வேக வைக்கக்கூடாது. இதிலுள்ள கந்தகக் கலவை அலுமினியத்துடன் சேர்ந்தால் பூ மஞ்சளாகிவிடும்.

cakliஇதைத் தண்ணீரில் வேகவைப்பதை விட நீராவியில் வேகவைக்கலாம். அப்படி வேகவைத்தால் வைட்டமின் சி சத்து அதிகரிக்கும். மேலும் காலிஃப்ளவர் கொழுப்பு சத்து இல்லாத காய்கறி. குறைந்த கலோரிகள் கொண்டது.

மேலும் இது இதய நோய்க்கு இதமான காய்கறி. காலிந்ப்ளவருக்கு புற்று நோயை தடுக்கும் சக்தி உள்ளது. பூ வேகும் போது ஒரு ரசாயனம் வெளிவருகிறது. இது உடலினுள் சென்று உடல் தானாக உற்பத்தி செய்யும் புற்றுநோய் தடுக்கும் பொருளை அதிகமாக சுரக்கச் செய்கிறது.

இது இடுப்பில் ஏற்படும் கருப்பு தழும்புகளைப் போக்கவல்லது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது நார்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறியாகும்.