Home கலை உலகம் மார்ச்-15-ல் பரதேசி வெளியீடு…!

மார்ச்-15-ல் பரதேசி வெளியீடு…!

865
0
SHARE
Ad

paradesiசென்னை, பிப்.27- பாலா இயக்கியுள்ள பரதேசி படம் மார்ச்-15ம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவன் இவன் படத்திற்கு பிறகு பாலா இயக்கியுள்ள படம் பரதேசி. அதர்வா, தன்சிகா, வேதிகா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ஆரம்பத்தில் பி.வி.பி. நிறுவனம் தயாரித்தது.

பின்னர் அப்படத்திலிருந்து அந்நிறுவனம் விலக பாலாவே தனது சொந்த தயாரிப்பான பி ஸ்டுடியோவில் படத்தை எடுத்தார்.

#TamilSchoolmychoice

பாலாவின் படங்களிலேயே மிக குறைந்த நாளில் அதாவது 90நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட படம் இது தான்.

1940களில் ஆங்கிலே‌‌யர் நம் மண்னை ஆண்டபோது தேயிலை தொழிலாளர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை இப்படத்தின் கதைக்களமாக்கியுள்ளார்.

பொதுவாக பாலா படம் என்றாலே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அதேப்போல் பரதேசி படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மணிரத்னம், அனுராக் காஷ்யாப் உள்ளிட்ட பலரும் இவரது படத்தை பார்த்து பாராட்டியுள்ளனர். குறிப்பாக பாலா இயக்கிய படங்களிலேயே பரதேசி படம் தான்  சிறந்தது என்று அவரது குருநாதரும், இயக்குனருமான பாலுமகேந்திரா நற்சான்று கொடுத்துள்ளார்.

மேலும் சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழாவிற்கும் இப்படம் தேர்வாகியுள்ளது. இதனால் படத்‌தின்  வெளியீட்டிற்கான தேதி தள்ளிப்போனது.

இந்நிலையில் வருகிற மார்ச் 15ம் தேதி படம் வெளியிடப்போவதாக பாலா அறிவித்துள்ளார்.

இதனை இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரும் தனது ட்விட்டரில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.