Home வணிகம்/தொழில் நுட்பம் ஸ்பைஸ் ஜெட்டின் 186 வழித்தடங்கள் ரத்து – விமான போக்குவரத்து இயக்குநரகம் நடவடிக்கை!

ஸ்பைஸ் ஜெட்டின் 186 வழித்தடங்கள் ரத்து – விமான போக்குவரத்து இயக்குநரகம் நடவடிக்கை!

551
0
SHARE
Ad

spicejetபுதுடெல்லி, டிசம்பர் 7 – ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பொருளாதார இழப்புகள் மற்றும் தொடர்ச்சியான விமானப் பயணங்கள் ரத்து போன்ற காரணங்களால் உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஸ்பைஸ் ஜெட்டின் 186 வழித்தடங்களை ரத்து செய்துள்ளது.

சன் குழுமத்தின் அதிபர் கலாநிதி மாறன் பெரும்பான்மை பங்குதாரராக இருக்கும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், தொடர்ச்சியான வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றது. விமான நிறுவனத்தின் எதிர்காலம், நிச்சயமற்ற சூழலில் உள்ள நிலையில், அந்நிறுவனத்தின் 186 வழித்தடங்களை விமான போக்குவரத்து இயக்குநரகம் ரத்து செய்துள்ளது.

மேலும், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஒரு மாதத்திற்கு மேல் செல்லும் முன்பதிவுகளை எடுத்து கொள்ளக் கூடாது என்றும், இதில் பாதிப்படைந்த பயணிகளுக்கு 30 நாட்களுக்குள் கட்டணங்களை திரும்பச் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

#TamilSchoolmychoice

அதுமட்டுமல்லாமல், நிறுவன ஊழியர்களுக்கும் நிலுவையில் உள்ள சம்பளத்தை 10 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.  இது குறித்த அறிவிப்புகள் அந்நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து இயக்குநரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்தில் இரண்டாம் இடத்தில் இருந்த ஸ்பைஸ் ஜெட், 5-வது காலாண்டில் 50.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. மேலும் , அந்நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுக்கு சுமார் 1600 கோடி ரூபாய் அளவிற்கு கடன்தொகை செலுத்த வேண்டி இருப்பதால் அதுகுறித்த அறிக்கையையும் தாக்கல் செய்ய விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.