Home உலகம் ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் 

ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் 

669
0
SHARE
Ad

மாஸ்கோ, டிசம்பர் 7 – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக எதிர்வரும் 10-ம் தேதி, இந்தியா வருகிறார். அவரை வரவேற்கத் தயாராக இருப்பதாக இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் தெரிவித்துள்ளனர்.

putin
ரஷிய அதிபர் புதின்

இந்தியாவில் விரைவில், இந்தியா-ரஷ்யா இடையிலான 15-வது உச்சி மாநாடு நடைபெற இருக்கின்றது. இதில் கலந்து கொள்வதற்காக இந்தியா வரும் புதின், இந்தியாவுடன் பல்வேறு முக்கிய வர்த்தக ஒப்பந்தங்களையும் ஏற்படுத்த உள்ளார் என்று இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் எதிர் துருவங்களாக இருந்து வரும் நிலையில், ரஷ்யா, ஆசிய நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொள்வதில் அதிக அக்கறை காட்டி வருகின்றது. குறிப்பாக ஆசியாவின் முன்னணி நாடுகளாக இருக்கும் இந்தியா, சீனாவுடன் பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்த புதின் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இந்தியாவுடன் பல ஆண்டுகளாக பல்வேறு இராணுவ ஆயுத ஒப்பந்தங்களைக் கொண்டிருக்கும் ரஷ்யா, புதினின் இந்திய வருகைக்குப் பிறகு மேலும் பல்வேறு துறைகளில் வர்த்தகப் போக்குவரத்தை ஏற்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதில் குறிப்பாக மும்பை பகுதியில் வைரம் பட்டை தீட்டும் தொழில் பூங்கா அமைக்கும் ஒப்பந்தம் மற்றும் இந்தியாவின் ஓ.என்.ஜி.சி, ரஷ்யாவின் எண்ணெய் வயல்களில் முதலீடு செய்வது குறித்த ஒப்பந்தம் முக்கிய இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்கா எச்சரிக்கை:

இந்தியாவிற்கு, ரஷ்ய அதிபர் புதினின் வருகை பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்களுக்கு வழி வகுக்கும் என்பதை உணர்ந்த அமெரிக்கா, ரஷ்யாவுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் ஏற்படுத்த இது சரியான தருணம் அல்ல என்று இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்துள்ளது.

மேலும், புதினின் வருகை, வரும் ஜனவரி மாதம் இந்தியாவிற்கு வர இருக்கும், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சுற்றுப்பயணத்தை எந்தவகையிலும் பாதிக்காது என்றும் தெரிவித்துள்ளது.