Home உலகம் கைலாஷ் நோபல் பரிசு பெற ஓஸ்லோ வந்தடைந்தார்!

கைலாஷ் நோபல் பரிசு பெற ஓஸ்லோ வந்தடைந்தார்!

600
0
SHARE
Ad

ஓஸ்லோ, டிசம்பர் 8 – இந்த முறை அமைதிக்கான நோபல் பரிசு பெறவிருக்கும் இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி, தனது பரிசைப் பெறுவதற்காக இன்று நோர்வே நாட்டின் ஓஸ்லோ நகர் சென்று சேர்ந்துள்ளார்.

Nobel peace prize winner Indian Kailash Satyarthi (L) is welcomed by Thorbjoern Jagland (R), chairman of the Norwegian Nobel Committee, upon his arrival at Oslo Airport, in Oslo, 08 December 2014. The Nobel Peace Prize award ceremony and the Nobel banquet will take place in Oslo on 10 December.  EPA/HEIKO JUNGE NORWAY OUT
ஓஸ்லோ விமான நிலையத்தில் கைலாஷை வரவேற்கும் நோபல் பரிசளிப்புக் குழுவின் தலைவர்

நோர்வே நாட்டின் நோபல் பரிசளிப்புக் குழுவின் தலைவரான தோர்ப்ஜோர்ன் ஜக்லண்ட் ஓஸ்லோ விமான நிலையத்தில் கைலாஷ் சத்யார்த்தியை இன்று வரவேற்றார்.

நோபல் பரிசளிப்பு விழாவும் அதனைத் தொடர்ந்து விருந்து நிகழ்ச்சியும் எதிர்வரும் டிசம்பர் 10ஆம் தேதி ஓஸ்லோவில் நடைபெறும்.

#TamilSchoolmychoice

கைலாஷூடன் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொள்பவர் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் தலிபான் அமைப்புக்களுடன் போராட்டம் நடத்தி வரும் பாகிஸ்தானின் இளம் பெண் மலாலா யூசோப்சாய் ஆவார்.

Pakistani education activist and Nobel Peace Prize laureate Malala Yousafzai speaks at the World's Children's Prize ceremony in Mariefred, Sweden, 29 October 2014. Yousuzai is the first ever to receive the Nobel Peace Prize and the World's Children's Prize the same year.  EPA/ANDERS WIKLUND SWEDEN OUT
அமைதிக்கான நோபல் பரிசு பெறும் மலாலா யூசோப்சாய்

படங்கள்: EPA