Home உலகம் ஒருமணி நேரம் அனகோண்டாவின் வயிற்றில் இருந்த வாலிபர்! (காணொளி உள்ளே)

ஒருமணி நேரம் அனகோண்டாவின் வயிற்றில் இருந்த வாலிபர்! (காணொளி உள்ளே)

620
0
SHARE
Ad

paul-story_வாஷிங்டன், டிசம்பர் 9 – அமெரிக்காவைச் சேர்ந்த பால் ரொசோலி என்ற இளைஞர் இயற்கை ஆர்வலர், தயாரிப்பாளர் மற்றும் சாகசக்காரர் என்று பன்முக திறமை கொண்டவர்.

சமீபத்தில் இவர் சமூக வலைத்தளமான டுவிட்டரில் அனகோண்டா உயிரோடு விழுங்கும் முதல் நபராக நான் இருப்பேன் என்ற காணிளியை பதிவேற்றம் செய்து பரபரப்பை உண்டாக்கினார்.

பின்னர் அது டிஸ்கவரி தொலைக்காட்சியில் டிசம்பர் மாதம் ஒளிப்பரப்பாக இருக்கும் ஈட்டன் லைவ் எனும் நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட முன்னோட்டம் என்பது தெரிய வந்தது.

#TamilSchoolmychoice

அழிந்து வரும் அமேசான் மழைக்காடுகளின் மீது மக்களின் கவனத்தைக் கொண்டு வர வேண்டியே இந்த முடிவை எடுத்ததாக ரொசோலி தெரிவித்தார்.

மனிதர்களின் கேளிக்கைக்காக விலங்குகளைக் கொடுமைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என விலங்குகள் நல ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருந்தபோதிலும் 60 நாட்கள் சதுப்பு நிலக்காடுகளில் முகாமிட்டு, பல நாட்கள் அனகோண்டாவைத் தேடி அலைந்த ரொசோலியும் அவரது குழுவும், இறுதியாக 20 அடி நீளமுள்ள பெண் அனகோண்டா ஒன்றைக் கண்டனர்.

பின்னர் அனகோண்டா விழுங்கும் போது உயிருடன் இருக்கும் வகையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கார்பன் ஃபைபர் உடையை பால் ரொசோலி அணிந்துகொண்டார்.

anacondaஅவர் அதன் அருகில் சென்ற உடனேயே அவரை விழுங்க அது முயற்சிக்கவில்லை. மாறாக ரொசோலியிடம் இருந்து தப்பிக்கவே அது முனைந்துள்ளது.

ரொசோலியோ தன்னை விழுங்கச்செய்வதற்காக அனகோண்டாவைக் கடுப்பேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து அனகோண்டா அவரை விழுங்கியது.

அனகோண்டா ரொசோலியை விழுங்கினாலும், வெளியில் உள்ள தனது குழுவினரை அவர் தொடர்பு கொள்ளும் வகையில் அவர் அணிந்திருந்த பிரத்யேக உடையில் அதற்கான கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.

அதன் வழியே தனது குழுவினரை அவர் தொடர்பு கொண்டு பேசிய படியே இருந்தார். ஒரு கட்டத்தில் சிறிது பயந்தாலும் பின்னர் தைரியத்துடன் சுமார் ஒரு மணி நேரம் அதன் வயிற்றுக்குள் இருந்து உயிருடன் வெளியே வந்தார் ரொசோலியோ. அந்தப் பதட்டமான நிமிடங்கள் முழுவதும் ஈட்டன் லைவ் நிகழ்ச்சிக்காக படமாக்கப்பட்டது.

முதலில் அமெரிக்காவில் ஒளிபரப்பப்படவுள்ள இந்த நிகழ்ச்சி டிசம்பர் 10-ஆம் தேதி பின்லாந்து, டென்மார்க், போலந்து, ஸ்வீடன் போன்ற நாடுகளிலும், அதன் பின்னர் ஆஸ்திரேலியா, இந்தியா, சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் ஒளிபரப்பாக இருக்கிறது.