Home இந்தியா பகவத் கீதையை தேசிய புனித நூலாக்க கூறிய அமைச்சர் சுஷ்மாவிற்கு எதிர்ப்பு வலுக்கிறது!

பகவத் கீதையை தேசிய புனித நூலாக்க கூறிய அமைச்சர் சுஷ்மாவிற்கு எதிர்ப்பு வலுக்கிறது!

518
0
SHARE
Ad

sushmaடெல்லி, டிசம்பர் 9 – மத்திய அமைச்சர் நிரஞ்சன் ஜோதியின் சர்ச்சைக்குரிய பேச்சு பற்றி பரபரப்பு அடங்குவதற்குள், பகவத் கீதையை தேசிய புனித நூலாக அறிவிக்க வேண்டும் என்ற வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜின் பேச்சுக்கு பலத்த கண்டனம் எழுந்துள்ளது.

டெல்லியில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுஷ்மா சுவராஜ், அனைத்து மனிதர்களின் அன்றாட பிரச்சனைகளுக்கும் பகவத் கீதையில் தீர்வு உள்ளதால் அதனை தேசிய புனித நூலாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தாம் கோரிக்கை தீர்மானம் முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறினார். சுஷ்மாவின் இப்பேச்சு தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்கட்சிகளின் கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது.

#TamilSchoolmychoice

பிரதமர் மோடியின் திட்டத்தை சுஷ்மா சுவராஜ் நடைமுறைப்படுத்த முயற்சிப்பதாக ஐக்கிய ஜனதாதளம் குற்றம்சாட்டியுள்ளது. மதச்சார்புள்ள பிரச்சனையை தூண்டிவிட்டுள்ளதன் மூலம் நாட்டில் பிரிவினைவாதத்தை சுஷ்மா உருவாக்க முயல்வதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தெர்டர்பாளர் மணிஷ்திவாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி இந்து அல்லாதோரை இழிவுபடுத்தி பேசிய விவகாரத்தை திசை திருப்பவும் சஷ்மா சுவராஜ் இவ்வாறு பேசியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.