Home வாழ் நலம் குழந்தைகளுக்கு நரம்பு மண்டலக் குறைபாடுகளை தடுக்கும் பச்சைப் பட்டாணி

குழந்தைகளுக்கு நரம்பு மண்டலக் குறைபாடுகளை தடுக்கும் பச்சைப் பட்டாணி

1027
0
SHARE
Ad

fresh pea fruit with green leafடிசம்பர் 9 – பார்வைக்கு மட்டுமின்றி, சமைக்கவும், சுவைக்கவும் அருமையானது பச்சைப் பட்டாணி. எந்த உணவுடனும், கைப்பிடி அளவு பட்டாணி சேர்த்தால் அருமையான சுவைமிகு உணவாக மாறும்.

குழந்தைகளுக்கு கேரட்டையும், பட்டாணியையும் மசித்து கொடுக்கலாம். இதில் பலவிதமான சத்துகள் அடங்கியுள்ளன.
பச்சைப் பட்டாணியில் உடலுக்குத் தேவையான சத்துகளை கொடுக்கக்கூடிய தாதுச்சத்துகள், வைட்டமின்கள் ஆகியவை அடங்கியுள்ளன.

பீன்ஸ், தட்டைப்பயறு ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது பட்டாணியில் கலோரிகள் குறைவு. 100 கிராம் பட்டாணியில் 81 கிலோ கலோரிகள் உள்ளன. கொழுப்பு இல்லை. புரதம் நிறைந்தது. கரையும், கரையாத தன்மையுள்ள நார்ச்சத்து உள்ளது.

#TamilSchoolmychoice

1306747354338பட்டாணியில் ஃபோலிக் என்ற அமிலம் அதிகம் உள்ளது. செல்களுக்கு உள்ளே மறபணு தொகுப்பு இயக்கம் சீராக நடைபெற ஃபோலிக் என்ற அமிலம் அதிகம் உள்ள உணவை கர்ப்பிணிகள் தேவைக்கேற்ப எடுத்துக் கொண்டால், பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்பு மண்டலக் குறைபாடுகள் வராது.

பட்டாணியில் நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான வைட்டமின் சி நிறைய உள்ளது. பட்டாணியில் உள்ள அமிலம் உடலில் உள்ள டொழுப்பை குறைக்கிறது. இதில் உள்ள வைட்டமின் கே, எலும்புகளுக்கு தேவையான கால்சியத்தை கொடுக்கிறது.

இதில் வைட்டமின் ஏ சரியான விகிதத்தில் அடங்கியிருப்பதால், சளிச் சவ்வுப் படலத்தின் ஆரோக்கியத்துக்கும் சரும ஆரோக்கியத்துக்கும் தெளிவான பார்வைக்கும் உதவுகிறது.

peasLGபால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்கள், தேன் முதலியவற்றைக் கூட உண்ணாத உணவுப் பழக்கமுள்ளவர்களின் புரதத் தேவையை ஈடுகட்டுவதில் பச்சைப் பட்டாணிக்கும் பெரிய பங்கு உண்டு.

இவற்றின் மூலம் தரமான, போதுமான புரதச்சத்து கிடைக்கும். தினமும் சிறிய அளவில் பட்டாணியை நமது உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தரும்.