Home கலை உலகம் இந்திய சினிமாவில் முதல் முறையாக ரூ 200 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்ட லிங்கா!

இந்திய சினிமாவில் முதல் முறையாக ரூ 200 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்ட லிங்கா!

514
0
SHARE
Ad

lingaa,சென்னை, டிசம்பர் 9 – அல்லயன்ஸ் காப்பீடு நிறுவனத்திடம் லிங்கா படம் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அந்த நிறுவனத்தின் தலைவர் சுமந்த் சலியன் கூறுகையில், “யாரும் எதிர்ப்பார்க்காத குறுகிய காலத்தில் ரஜினியின் லிங்கா படம் உருவாகியுள்ளது’.

“இந்த அளவு பெரிய தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ள ஒரே இந்தியப் படம் லிங்காதான். உள்நாடு, வெளிநாடுகளில் ஏற்படும் வருவாய் இழப்பையும் இந்த ரூ 200 கோடி காப்பீடு ஈடு செய்யும்,” என்றார்.

குறித்த நேரத்தில் எந்த காரணத்துக்காகவாவது படத்தை வெளியிட முடியாமல் போனாலோ, மோசமான காலநிலை, இயற்கைப் பேரிடரால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் படம் பாதிக்கப்பட்டாலோ இந்த காப்பீட்டின் மூலம் இழப்பீடு கிடைத்துவிடுமாம்.

#TamilSchoolmychoice

இந்திய சினிமாவில் காப்பீட்டு முறை நடைமுறைக்கு வந்தது 90-களில்தான். கல்நாயக் படத்துக்குத்தான் முதல் முறையாக காப்பீடு செய்யப்பட்டது. ரூ 100 கோடி பட்ஜெட் கொண்ட படத்துக்கு ரூ 80 லட்சம் வரை காப்பீட்டு முனைமம் (பிரிமியம்) கட்ட வேண்டுமாம்.