Home இந்தியா சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!

சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!

568
0
SHARE
Ad

modiடெல்லி, டிசம்பர் 9 – இன்று 68-வது பிறந்த நாள் கொண்டாடும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நீண்ட ஆயுளையும், ஆரோகியத்தையும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்”, என கூறியுள்ளார்.

இதற்கிடையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் சத்தீஸ்கரில் சமீபத்தில் நடந்த திவிரவாத தாக்குதலால் ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் உயிரிழந்ததால் சோனியா காந்தி தனது பிறந்த நாளை கொண்டாடவில்லை.

#TamilSchoolmychoice

காங்கிரஸ் தொண்டர்களும் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என  சோனியா கேட்டுக் கொண்டுள்ளார்.