Home கலை உலகம் ‘காக்கி சட்டை’ படத்திலும் பாடல் பாடிய சிவகார்த்திகேயன்!

‘காக்கி சட்டை’ படத்திலும் பாடல் பாடிய சிவகார்த்திகேயன்!

694
0
SHARE
Ad

Sivakarthikeyan_1910mசென்னை, டிசம்பர் 10 – ‘மான் கராத்தே’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘காக்கி சட்டை’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார்.

இப்படத்தை ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தை தனுஷின் ஃவுண்டர்பார் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கிறார்.

விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வந்த இப்படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் பாடல்களை ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி வெளியிட உள்ளனர். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ‘ஐ யம் சோ கூல்’ என்று தொடங்கும் பாடலைப் பாடியுள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்கு முன் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘மான் கராத்தே’ படத்தில் ‘ராயபுரம் பீட்டரு’ பாடல்களை சிவகார்த்திகேயன் பாடியுள்ளார். இப்படம் பொங்கலுக்குப் பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.